அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம் சந்தேக நபரை தேடும் பொலிஸார்,கைது செய்யப்பட நபர் தொடர்பில் மெளனம்

 மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இடம் பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் நேற்று மாலை மன்னார் நடுக்குடா பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்


குறித்த நபர் இரானுவத்தில் பனியாற்றிய நபர் எனவும் முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை தெரிவித்ததை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்திய நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கபட்ட போதிலும் குறித்த விடயம் தொடர்பிலும் கைது தொடர்பிலும் மன்னார் பொலிஸார் உறுதிப்படுத்தாத நிலையே காணப்படுகின்றது


அதே நேரம் நேற்றைய தினம் கைது நடவடிக்கை இடம் பெற்ற போதிலும் அது தொடர்பில் எந்தவொரு ஊடக வெளியீட்டையும் மேற்கொள்ளாத பொலிஸார் சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தெரியப்படுத்துமாறு கோரி இன்றையதினம் சந்தேக நபர் தொடர்பான ஓவியம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்


தொடர்சியாக விசாரணைகள் தொடர்பில் பொலிஸார் உண்மை தன்மையை வெளிப்படுத்தாத நிலையில் தற்போது சந்தேக நபர் என்ற  அடிப்படையில் ஓவியம் ஒன்றையும் வெளியிட்டு மக்கள் மத்தியில் பொலிஸ் விசாரணை தொடர்பில் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர் 








மன்னார் துப்பாக்கிசூட்டு சம்பவம் சந்தேக நபரை தேடும் பொலிஸார்,கைது செய்யப்பட நபர் தொடர்பில் மெளனம் Reviewed by Author on January 18, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.