அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கடலில் மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல், மீனவர் ஒருவர் படுகாயம் ஒன்று திறண்டு மீனவர்கள் எதிர்ப்பு.....

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மீன் பிடிக்க கடலுக்குச்சென்ற மீனவர்கள் சிலர் மீது கடலில் வைத்து கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக மீனவர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

மீனவர்கள் மீது கடலில் வைத்து கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டமையினால் சிறிது நேரம் மன்னார் பாலத்தடி கடற்கரையில் மீனவர்கள் ஒன்று திறண்டு தமது கண்டனத்தை தெரிவித்தனர்.

-குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்....

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் உள்ள கடற்படை காவலரனில் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை மீனவர்கள் தொழிலுக்குச் செல்லும் தமது ஆவணங்களை சமர்பித்து உரிய அனுமதியுடன் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற படகு ஒன்றை கடலில் வைத்து இடை மறித்த சிவில் உடையில் இருந்த கடற்படையினர் ஆவணத்தை பரிசீலினை செய்ய ஆவணங்களை கோரியுள்ளனர்.இந்த நிலையில் ஆவணங்களை வழங்குவதற்கு முன்னரே கடற்படையினர் குறித்த படகில் இருந்த மீனவர்கள் மீது கடுமையாக தாக்கியுள்ளனர்.

-இந்த நிலையில் தாக்குதல்களுக்கு உள்ளான மீனவர்கள் சக மீனவர்களுக்கு தகவல் வழங்கியதோடு,கடற்கரைக்கு திரும்பினர்.பின்னர் கடும் காயங்களுக்கு உள்ளான மீனவர் ஒருவர் உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் மீனவர்கள் கடற்கரையில் ஒன்று கூடி தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

-சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீனவர்களுடன் கலந்துரையாடினார்.

தொடர்சியாக மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடு படும் போது மன்னார் பிரதான பாலத்தில் இருந்து மீன் பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பகுதி வரை சுமார் மூன்று இடங்களில் தாங்கள் முழுமையாக சோதனைக்கு உற்படுத்தப்படுவதாகவும் இதனால் தங்களால் உரிய நேரத்தில் மீன்  பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும் இன்றைய தினம் (21) வழமை போல் கடற்தொழிலுக்கு சென்ற நிலையில் கடல் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் தங்களை முழங்காளில் வைத்து தடிகளால் அடித்ததாகவும் துவக்கினால் சுடுவதாக அச்சுறுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூற்றம் சுமத்தியுள்ளனர்

இன்று தாங்கள் இரண்டு படகுகளில் கடலுக்கு சென்றதாகவும் அதில் எங்களுக்கு உரிய அனுமதி பத்திரங்கள் மாற்றி மாற்றி வைக்கப்பட்டமையினால் ஆவணக்களை பெறுவதற்கான இரு படகுகளையும் ஒன்றாக இணைத்து ஆவணங்களை சரிப்படுத்தி கொண்டோம். அதை பார்த்த கடற்படையினரே தங்களைப் சந்தேகத்தின் பெயரில் கடுமையாக தாக்கியதாகவும் அதில் ஒரு மீனவர் பலத்த காயங்களுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சக மீனவர்கள் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி   பாதிக்கப்பட்ட மீனவர்களுடன் கலந்துரையாடி குறித்த பிரச்சினையை சுமூக நிலைமைக்கு கொண்டு வந்தார்.

அத்துடன்   மீனவர்கள் கடற்படையினரினால் தாக்கப்பட்டமை தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களால் முறைப்படும் மேற் கொள்ளப்படுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.










மன்னார் கடலில் மீனவர்கள் மீது கடற்படை தாக்குதல், மீனவர் ஒருவர் படுகாயம் ஒன்று திறண்டு மீனவர்கள் எதிர்ப்பு..... Reviewed by Author on July 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.