அண்மைய செய்திகள்

recent
-

மல்லாவியில் மகிழ்வு இல்லம் திறந்து வைப்பு !

 முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி ஒளிரும் வாழ்வு  சமூக சேவை நிலையத்தில் மகிழ்வு இல்ல கட்டம் இன்று (27-09-2023)   திறந்து வைக்கப்பட்டது 


மாற்று வலுவுள்ளோர்களின் துயர் துடைக்கும் சமூக சேவை  அமையமாக கடந்த தசாப்த காலமாக இயங்கி வரும் ஒளிரும்வாழ்வு சமூக சேவை அமையத்தின் ஓர் அங்கமாக இன்றைய தினம் மகிழ்வு  இல்லம் எனும் பெயரில் சமூக சேவை கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது 

குறித்த கட்டடம் உளநல வைத்திய நிபுணரும் பேராசிரியருமான டாக்டர் சிவயோகன் அவர்கள் திறந்து  வைத்திருந்தார் 

நிகழ்வில் மாற்று வலுவுள்ள மழலைகளின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன 


பிரமுகர்களுக்கான கௌரவிப்பு பரிசில்களும் மற்றும் கலை நடனங்கள் வழங்கிய மாணவர்களுக்கு பரிசில்களும்  வழங்கப்பட்டிருந்தன 

நிகழ்வில் மத குருமார்கள்   , ஆயுள்வேத வைத்தியர் சிவரஞ்சனி சுசீந்திரன்,அனிஞ்சியன்குளம் கிராம அலுவலர் துசாந்தினி, மல்லாவி வர்த்தகர்கள் ,,மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் , பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்

மல்லாவியில் மகிழ்வு இல்லம் திறந்து வைப்பு ! Reviewed by Author on September 27, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.