அண்மைய செய்திகள்

recent
-

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் முசலி விஜயம்- வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு.

முஸ்லீம்  ஹாண்ட்    சிறிலங்கா அமைப்பின்  ஒழுங்கமைப்பில் இலங்கைக்கான பாகிஸ்தான் தூதுவராலயத்தின் அனுசரணையில் மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவை சேர்ந்த வறுமை கோட்டிற்கு உட்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம்(24)  திங்கட்கிழமை இடம் பெற்றது.இலங்கைக்கான பாகிஸ்தான்   உயர் ஸ்தானிகர்    மேஜர் ஜெனரல் பகீம் முல் அசீஸ்  பங்குபற்றுதலுடன் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள மரிச்சுக்கட்டி பகுதியை சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மேற்படி வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


குறிப்பாக முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 5 பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு தையல் இயந்திரமும்  150   குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும்  இலங்கைக்கான பாகிஸ்தான்   உயர் ஸ்தானிகர்    மேஜர் ஜெனரல் சஹிபுல் அசிஸ்    வழங்கி வைக்கப்பட்டது.


குறித்த நிகழ்வில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உள்ளடங்களாக பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலய உத்தியோகத்தர்கள் முசலி பிரதேச செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் ,முஸ்லிம் ஹாண்ட்   சிறிலங்கா  பிரதிநிதிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


மேலும் மரிச்சுக்கட்டி பகுதியில்  50 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு கலப்பு விவசாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் ஆராய்ச்சி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்


இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் முசலி விஜயம்- வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு. Reviewed by Author on June 24, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.