மன்னார்-தலைமன்னார் வீதியில் விபத்து-மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனர் அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் பலி
மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலை இடம்பெற்ற விபத்தில் மன்னார் மறைமாவட்ட அருட் பணியாளரும் மன்னார் மடு மாதா சிறிய குருமடத்தின் உதவி இயக்குனருமான அருட்தந்தை கே.ஜொனார்த்தனன் அடிகளார் (வயது 31) உயிரிழந்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை(7) மாலை தலைமன்னார் ஆலயத்தில் மாலை நேர திருப்பலியை ஒப்புக் கொடுத்த நிலையில் மீண்டும் தலை மன்னாரில் இருந்து மன்னார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த போது மாலை 6.50 மணியளவில் கட்டுக்காரன் குடியிருப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்திற்கு உள்ளாகியது. இதன் போது படுகாயமடைந்த குறித்த அருட்தந்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் உயிரிழந்தார். சடலம் தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Reviewed by Author
on
July 07, 2024
Rating:


No comments:
Post a Comment