அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி

 மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழிலாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட  பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,


    அடம்பன் பள்ளிவாசல் பிட்டி நெடுவரம்பு பகுதியில் சீவல் தொழில் செய்து வரும் நிலையில் நேற்று (2) மாலை குறித்த நபரை அடம்பன் பொலிஸார் வீதியில் மறித்து விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர்.


சம்பந்தப்பட்ட நபர்   காட்டு இறைச்சி விற்பதாக கிடைக்கப்பெற்ற  தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்வதாக பொலிஸார் தெரியப்படுத்தியுள்ளனர்.


அதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நபர்   வேறு நபர் ஒருவருடன் போலீசார் விசாரித்த விடயம் தொடர்பாக முரண்பட்ட நிலையில் முரண்பட்ட நபரால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் பொலிஸார் குறித்த நபரின் வீட்டில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.


 இதன்போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து பனை உற்பத்தி பொருளான பனங்கள்   போத்தல் மீட்கப்பட்டுள்ளது.


 இதை அடிப்படையாக கொண்டு குறித்த சீவல் தொழிலாளி கைது செய்ய முயன்ற நிலையில் ஏற்பட்ட வாய் தர்கத்தின் போது பொலிஸார் பரஸ்பரம் முரண்பட்ட நிலையில் காயம் ஏற்பட்டுள்ளது.


இதன் போது ஹான் ஹெப்பால்  (கை விலங்கு) தாக்கப்பட்டதாகவும் போலியான வழக்கு தன் மீது போட முயற்சி மேற்கொள்ள பட்டதாகவும்,அதன் காரணமாக தான் முரண் பட்டதாகவும்  காயங்களுக்கு உள்ளான நபர் தெரிவித்திருந்தார்.


குறித்த விடயம் தொடர்பில் அடம்பன் பொலிஸார் தெரிவிக்கையில்,,


 போலீசார் எந்த வித தாக்குதலும் மேற்கொள்ளவில்லை என்றும் சந்தேக நபர் மது போதையில் இருந்ததாகவும் வேறு ஒரு நபர் மீது தாக்குதல் முயற்சி மேற்கொள்ள முயன்றதன் அடிப்படையில் கைது செய்ய முயற்சித்த நிலையில் பொலிஸாரை சந்தேக நபர் தாக்க முயற்சித்த நிலையில் முரண்பாடு ஏற்பட்டதாகவும் இதன் போது குறித்த நபர் விழுந்து காயம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர் .


இந்த நிலையில் பலத்த காயங்களுடன் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேக நபரை பார்வையிட்டார் நீதிபதி சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை அடம்பன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்மன்னாரில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Author on May 03, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.