மன்னாரில் நித்திரையில் இருந்த ஒருவர் மர்மமாக மரணம்
இச்சம்பவம் மன்னார் எமில் நகரில் நடைபெற்றுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் இருதயநகர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய விஜயகுமார் என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை நித்திரையின் போது மர்மமான முறையில் இறந்திருந்தவரின் சடலத்தினைப் பார்த்த அயலவர்கள் உடனடியாக மன்னார் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. ஜீவராணி ஆகியோர் சடலத்தைப் பார்வையிட்டனர்.
இதனையடுத்து இன்று காலை சம்பவ இடத்திற்கு வந்த பொலிசாரும் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி கே. ஜீவராணி ஆகியோர் சடலத்தைப் பார்வையிட்டனர்.
பின்னர் சடலத்தினை பிரேதப் பரிசோதனைக்காக மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லுமாறு பொலிசாருக்கு நீதிபதி திருமதி கே. ஜீவராணி உத்தரவிட்டார். சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மரணம் தொடர்பான விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் நித்திரையில் இருந்த ஒருவர் மர்மமாக மரணம்
Reviewed by NEWMANNAR
on
June 28, 2011
Rating:

No comments:
Post a Comment