கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் மன்னார் வளாகம் திறப்பு
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் மன்னார் வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நீண்டகாலமாக வன்னி மாவட்ட ஆசிரிய பயிற்சியாளர்கள் தங்களது பயிற்சிக்காக யாழ்பாணம் செல்லும் நிலை காணப்பட்டது.
தமிழ் மற்றும் சமூகக்கல்வி ஆகிய பாடங்களுக்கான பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளன.இதுவரையில் 65மாணவர்கள் இங்கு கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
கைத்தொழில் வணிகத்துறை அமைச்சர் ரிசாத் பதயுதீன்,வடமாகாண ஆளுநர்
ஜி .ஏ . சந்திரசிறி ,ஆகியோர் இந்த பயிற்சி கலாசாலையை திறந்து வைத்தனர் .
கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் மன்னார் வளாகம் திறப்பு
Reviewed by NEWMANNAR
on
September 19, 2011
Rating:
No comments:
Post a Comment