தமிழ் கூட்டமைப்பு ௭ம்.பியின் கேள்வியினை கேட்காது இதர ௭ம்.பிக்கள் இருவரும் மௌனம்
.jpg)
பாராளுமன்றம் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று புதன்கிழமை கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் வாழ்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது டெங்கு ஒழிப்பின் பொருட்டு வட மாகாண ஆளுநரினால் வவுனியா நகர சபைக்கு 2009 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை, அது செலவிடப்பட்டமை தொடர்பாக கணக்கு அறிக்கைகள் உள்ளிட்ட கேள்விகளை கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவசக்தி ஆனந்தன் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரிடம் கேட்டிருந்தார். கேள்விநேரத்தின் போது சிவசக்தி ஆனந்தன் ௭ம்.பியை சபாநாயகர் மூன்று முறை பெயர்கூப்பிட்டு அழைத்த போதிலும் அவர் அவையில் இருக்கவில்லை.
அக்கட்சியை சேர்ந்த ௭வருமே அந்தநேரத்தில் அவையில் இருக்கவில்லை. இதேவேளை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் முதலாவது சுற்று நிறைவடைந்து. இரண்டாம் சுற்று ஆரம்பிக்கப்பட்ட வேளையில் அவையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ௭ம்.சுமந்திரன் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் அவையில் பிரசன்னமாய் இருந்தனர். இரண்டாவது சுற்றின் போது கேள்வியை கேட்பதற்காக சிவசக்தி ஆனந்தனின் பெயரை கூப்பிட்டபோது அவர் அவையில் இருக்கவில்லை. அதேநேரம் அவையிலிருந்து கூட்டமைப்பு ௭ம்.பிக்கள் இருவரும் அக்கேள்வியை கேட்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில் அக்கேள்வியை ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான ரவி கருணாநாயக்க கேட்டார். அதற்கான பதிலை சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபாலடி சில்வா சபையில் சமர்ப்பித்தார்.
தமிழ் கூட்டமைப்பு ௭ம்.பியின் கேள்வியினை கேட்காது இதர ௭ம்.பிக்கள் இருவரும் மௌனம்
Reviewed by NEWMANNAR
on
June 07, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment