மன்னார் தழல் இலக்கிய வட்டமும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து வழங்கும் மாபெரும் ஓவிய மற்றும் புத்தக கண்காட்சி
மன்னார் தழல் இலக்கிய வட்டமும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து மாபெரும் ஓவிய மற்றும் புத்தக கண்காட்சியை 27, 28, 29 /10/2012 (சனி, ஞாயிறு, திங்கள்) ஆகிய தினங்களில் காலை 8.30 முதல் மாலை 7.00 மணிவரை மன்/ புனித சவேரியார் பெண்கள் கல்லூரியில் (தேசிய பாடசாலை) நடாத்துகின்றன.
27ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.00மணிக்கு நடைபெற இருக்கும் ஆரம்ப விழாவில் தழல் இலக்கிய வட்ட இணையதளமும் (www.thazal.com) வெளியிடப் பட உள்ளது.
தழல் இலக்கிய வட்டத் தோழமைகளின் தலைமையில் நடைபெற இருக்கும் ஆரம்ப வைபவத்தில் முதன்மை விருந்தினராக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு.விக்டர் சோசை அவர்களும், கெளரவ விருந்தினர்களாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் திரு.c.சந்திரய்யா மற்றும் முசலி பிரதேசச் செயலாளர் திரு செ.கேதீஸ்வரன் ஆகியோரும், சிறப்பு விருந்தினர்களாக மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி.ஹில்டா மற்றும் பல சாகித்ய விருதுகளைப் பெற்ற மன்னார் எழுத்தாளர் திரு. லோமியா உதயன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்
இந்நிகழ்விற்கு வரவேற்புரையை கவிஞர் அமல்ராஜ் றெவலும், ஆசியுரையை சிவஸ்ரீ.தர்மகுமார குருக்களும், தலைமையுரையை அருட்பணி.தமிழ்நேசன் அடிகளாரும், ஏற்பாட்டாளர்கள் உரையை மன்னார் அமுதன் மற்றும் தனுஜன் ஆகியோரும், நன்றியுரையை மன்னூரான் ஷிஹாரும் ஆற்றவுள்ளனர்.
நிகழ்ச்சிகளை ராதா பெர்னாண்டோ நெறிப்படுத்துவார். இப்புத்தக கண்காட்சியை பார்வையிட ஊக்குவிக்கும் பள்ளிகளின் நூலகத்திற்கு ரூ.3000 பெறுமதியான நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Reviewed by NEWMANNAR
on
October 28, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment