மன்னாரில் இரவில் தொடர் மின் தடை- 3 ஆம் தவணை பரிட்சைக்கு தோற்றும் மாணவர்கள் பாதிப்பு
மன்னார் மாவட்டத்தில் மின்சாரம் திடீர் திடீர் என தடைப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த நிலையில் உள்ளது.பகல்,இரவு பாராது தொடர்ந்தும் மின் தடங்கள் ஏற்பட்டு வருகின்றது.தற்போது நாளாந்தம் இரவு 7 மணி தொடக்கம் 8.30 மணி வரைக்குமான இடைப்பட்ட நேரங்களில் தொடர்ந்தும் இரவில் மின் தடங்கல் ஏற்படுவதாக மன்னார் மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
தற்போது மூன்றாம் தவணை பரிட்சை ஆரம்பித்துள்ள நிலையில் பரிட்சைக்கு தம்மை தயார் படுத்தும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களும் தொடர்ந்தும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அது மட்டுமின்றி எதிர்வரும் டிசெம்பர் மாதம் இடம் பெறவுள்ள கா.பொ.த சாதாரண தரப்பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் இரவு நேரங்களில் மின் தடங்கல் ஏற்படுவதினால் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
இதே சமயம் இரவு நேரங்களில் பெண்கள் அவசரத்தேவைகளுக்காக வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் இரவு,பகல் நேரங்களில் திடீர் திடீர் என மின்சாரம் தடைப்படுவதினாலும்,பின் அதியுயர் மின் வலுவுடன் மின் மீண்டும் வழங்கப்படுவதினால் பாவனையாளர்களுடைய பெறுமதி வாய்ந்த மின்சாதனப்பொருட்கள் பழுடைவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களாக மன்னாரில் குறித்த பிரச்சினை காணப்படுவதாகவும்,இதற்கான ஒரு நிரந்தர தீர்வை பெற்று மன்னார் மாவட்ட மக்களுக்கு சீரான மின்சாரத்தை வழங்குமாறு மன்னார் மாவட்ட மின் பாவனையாளர்கள் மன்னார் மாவட்ட மின்சார சபை அதிகாரிகளிடம் வேண்டு கொள் விடுத்துள்ளனர். இவ்விடையம் தொடர்பாக மின்சார சபையின் மன்னார் மாவட்ட பணிமனையின் அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்ட போது,,,,,
மன்னார்-உயிலங்குளம் பிரதான வீதியில் உள்ள மின் கம்பங்களில் மின் தடங்கல் ஏற்படுவதினால் மன்னாரில் மின் தடங்கல் ஏற்படுகின்றது.எனவே இதனை சீர் செய்ய மன்னார் மின்சார சபை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் மின்சார சபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Reviewed by NEWMANNAR
on
November 21, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment