அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களில் மோசடி.


மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்ட விவசாயிகளின் விவசாய நலனை மேம்படுத்துவதற்காக மாவட்ட விவசாய தினைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் 'றீற்ரா' திட்டத்தின் மூலம் கடந்த மாதம் வழங்கப்பட்ட விவசாய உள்ளீடுகள்,உபகரணங்கள் வழங்கியதில் பயணாளிகள் nதிரிவில் பாரிய முறைகேடு இடம் பெற்றுள்ளதாக மாந்தை மேற்கு விவசாய அமைப்பின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக விவசாய அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில்   கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இவ்விடையம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

இந்த திட்டத்திற்கு விவசாயக்கிராமங்கள்,பயனாளிகள் தெரிவு முறையில் வெளிப்படைத்தன்மை பேணப்படவில்லை என்பதனையும்,இவற்றில் குறைபாடுகள் காணப்படுவதாகவும்மாவட்ட விவசாய ஒருங்கினைப்புக்குழுக் கூட்டத்தில் ஏலவே நாங்கள் வலியுருத்தி இருந்தோம்.
அதற்கமைய எம்மோடு ஆலோசிப்பதாக அதிகாரிகளினால் உறுதியளிக்கப்பட்டது.ஆனால் வழமைப்படுத்தப்படவில்லை.

ஆகவே விவசாயிகள் அல்லாதவர்களுக்கும் வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கும்,குறிப்பிட்ட சில கிராமங்கள் மட்டும் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

யுத்தத்தினால் பெரிதும் பாதீக்கப்பட்டு தமது வாழ்வியலுக்காண வாழ்வாதார பிரதான தொழிலாக விவசாயச் செய்கையில் ஈடுபடுபவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

திட்டமிட்டே பலரது வேண்டு கோளையும் நிராகரித்து விவசாயத்திணைக்களம் இவ்வாறான முறையற்ற திட்ட அமுலாக்கத்தில் ஈடுபடுகின்றனர் என பாதீக்கப்பட்ட பல விவசாயிகளும்,விவசாய அமைப்புக்களும் எம்மிடம் முறையிட்டுள்ளனர்.

எனவே பொது மக்களுக்கு பாரபட்சமின்றி நேர்மையான முறையில் பணியாற்ற வேண்டிய அரச அதிகாரிகள் இவ்வாறு குறுகிய நோக்கத்துடன் பக்கச்சார்பாக செயற்படுவதையிட்டு ஆழ்ந்த கவலையடைகின்றோம்.

பாதீக்கப்பட்ட விவசாயிகள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதுடன் ஏலவே இவர்கள் தற்காலிக பதிவுள்ள அமைப்புகளுக்கு பெறுமதிமிக்க அறுவடை இயந்திரம் வழங்கியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எனவே எதிர்காலத்திலும் இவ்வாறான நிலை எமது மாவட்ட விவசாயிகளுக்கு தொடரக்கூடாது என்பதனை தங்களிடம் தயவுடன் கேட்டுக்கொள்ளுவதுடன் இதற்கு நியாயம் வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.என விவசாய அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடித்தில் குறிப்பிடப்பட்டள்ளதாக அவர் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதீக்கப்பட்டு மீள் குடியேற்றப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட விவசாய உபகரணங்களில் மோசடி. Reviewed by NEWMANNAR on December 07, 2012 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.