முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு அடிப்படை வசதியை செய்து கொடுக்க கோறிக்கை-செல்வம் எம்.பி.
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடற்தொழிலில் ஈடுபட்டு வரும் அப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு கடற் தொலில் ஈடுபடுவதற்காண உதவிகள் எவையும் வழங்கப்படாத நிலையில் காணப்படுவதாகவும்,ஆனால் தென் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு கடற் தொழிலில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு அரசாங்கம் சகல உதவிகளையும் செய்து கொடுத்துள்ளதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் கடல் தொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜீத சேனாரட்ன அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
-அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,
-நாட்டில் இடம் பெற்ற யுத்தித்தின் காரணமாக வன்னி மக்கள் இடம் பெயர்ந்து சென்று தற்போது மீள் குடியமர்ந்துள்ளனர்.இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு பகுதியில் 110 மீனவக்குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த மக்கள் கடல் தொழிலையே தமது தொழிலாக கொண்டுள்ளனர்.
ஆனால் இந்த மீனவர்கள் கடல் தொழிலில் ஈடுபடுவதற்கு அடிப்படை மீன் பிடி உபகரணங்கள் எவையும் இல்லாத நிலையில் உள்ளனர்.
இதனால் அந்த மக்கள் தமது மீன் பிடி தொழிலை திறம்பட செய்ய முடியாத நிலையில் உள்ளனர்.
ஆனால் தென்பகுதியில் இருந்து குறித்த பகுதிக்கு வந்து மீன் பிடியில் ஈடுபடும் தென்பகுதி மீனவர்களுக்கு அரசாங்கம் சகல வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.
-எனவே முல்லைத்தீவு பகுதியில் மீள் குடியேறிய அந்த மீனவர்களுக்கு கடல் தொழில் செய்வதற்காண அடிப்படை வசதியை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளுகின்றேன் என குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்களுக்கு அடிப்படை வசதியை செய்து கொடுக்க கோறிக்கை-செல்வம் எம்.பி.
Reviewed by NEWMANNAR
on
December 07, 2012
Rating:
No comments:
Post a Comment