மன்னாரில் பல தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களின் நன்னடத்தையில் அக்கரையின்றி தமது இலாப நோக்குடன் மாத்திரமே செயற்படுகின்றனர்-பெற்றோர் கவலை
மன்னாரில் தனியார் கல்வி நிலையங்கள் பலவற்றில் கட்டுப்பாடுகள் இல்லாத நிலை காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் பல்வேறு தீய செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் பல தனியார் கல்வி நிறுவனங்கள் காணப்படுகின்றது.
சில கல்வி நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசி பாவனை உற்பட பல்வேறு செயற்பாடுகளுக்கு அந்த கல்வி நிலைய நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் பல கல்வி நிலையங்களில் அவ்வாறான கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்தால் மாணவர்கள் அந்த தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்ல மாட்டார்கள் என்ற அச்சத்தில் பல கல்வி நிலையங்கள் அந்த கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்காத கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
கையடக்கத் தொலைபேசி பாவனை,ஆண் ,பெண் மாணவர்கள் தனிமையாக சந்திக்கின்றமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட கல்வி நிலையங்கள் தமது சுய இலாபத்திற்காக மாணவர்களை தீய பாதையில் அழைத்துச் செல்வதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். -
தற்போது 3 ஆம் தவணை பரிட்சை முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பல்வேறு வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளனர். -எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கின்ற தனியார் கல்வி நிலையங்கள் தமது வருமானத்தை மட்டும் பார்க்காது மாணவர்களின் ஒழுக்கத்திலும்,நன்னடத்தையிலும் அக்கறை செலுத்துமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சில கல்வி நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கைத்தொலைபேசி பாவனை உற்பட பல்வேறு செயற்பாடுகளுக்கு அந்த கல்வி நிலைய நிர்வாகம் தடை செய்துள்ளது. ஆனால் பல கல்வி நிலையங்களில் அவ்வாறான கட்டுப்பாடுகள் விதிப்பதில்லை என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கட்டுப்பாடுகள் பலவற்றை விதித்தால் மாணவர்கள் அந்த தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்ல மாட்டார்கள் என்ற அச்சத்தில் பல கல்வி நிலையங்கள் அந்த கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. இதனால் கட்டுப்பாடுகள் விதிக்காத கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவர்கள் பல்வேறு சமுதாய பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
கையடக்கத் தொலைபேசி பாவனை,ஆண் ,பெண் மாணவர்கள் தனிமையாக சந்திக்கின்றமை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்படிப்பட்ட கல்வி நிலையங்கள் தமது சுய இலாபத்திற்காக மாணவர்களை தீய பாதையில் அழைத்துச் செல்வதாகவும் பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர். -
தற்போது 3 ஆம் தவணை பரிட்சை முடிவடைந்த நிலையில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்கள் பல்வேறு வகுப்புக்களை ஆரம்பிக்கவுள்ளனர். -எனவே பெற்றோர் தமது பிள்ளைகளை நம்பிக்கையுடன் அனுப்பி வைக்கின்ற தனியார் கல்வி நிலையங்கள் தமது வருமானத்தை மட்டும் பார்க்காது மாணவர்களின் ஒழுக்கத்திலும்,நன்னடத்தையிலும் அக்கறை செலுத்துமாறு பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மன்னாரில் பல தனியார் கல்வி நிலையங்கள் மாணவர்களின் நன்னடத்தையில் அக்கரையின்றி தமது இலாப நோக்குடன் மாத்திரமே செயற்படுகின்றனர்-பெற்றோர் கவலை
Reviewed by NEWMANNAR
on
December 03, 2012
Rating:
.jpg)
No comments:
Post a Comment