முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமான திட்ட வரைபு
வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் சம்பந்தமான திட்ட வரைபு முதல் நிலை அறிக்கை சமரப்பணமும்,அங்கீகாரக் கூட்டமும் மன்னார் எருக்கலம்பிட்டி மத்திய மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் றெ்றது.
வடமாகாணத்திலுள்ள மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை பிரதி நிதித்துவப்படுத்தும். வகையில் மக்கள் பிரதி நிதிகள் மற்றும் புத்தி ஜீவிகள் என பலரும் இதன் போது சமூகமளித்திருந்தனர். வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற செயலனியின் தலைவர் பேராசிரியர் ஹஸ்புள்ளா தலைமையில் இந்த கூட்டம் இடம் பெற்றது.
1990 ஆம் அண்டுக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்த பிரதேசங்கள்,மற்றும் அவர்களது வரலாற்று பதிவுகள் குறித்து இந்த முதற் கூட்டத்தின் போது விரிவாக ஆராயப்பட்டதுடன்,தற்போது முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தின் போது இடம் பெறும் தடைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. அதே வேளை வடமாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் பிழையான இன ரீதியான கருத்துக்களை சில சக்திகள் விதைத்து வருவதாகவும்,அது களையப்பட்டு வடமாகாணத்தின் வாழும் அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் இந்த செயலணி கவனத்திற்கொண்டு செயற்பட்டுவருவதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.
அதே வேளை வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் மீண்டும் தமது தாயக பூமியில் கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பததை இங்கு சமூகமளித்திருந்த பிரதி நிதிகள் சுட்டிக்காட்டினர். மாந்தை,மடு பிரதேச அபிவிருத்தி குழு இணைப்பாளர் மீரா மொஹிதீன் அமீன்,சட்டத்தரணிகளான எம்.சபூர்தீன்,சதகத்துல்லா ,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ஹூனைஸ் பாருக்,வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

Reviewed by Admin
on
February 17, 2013
Rating:

No comments:
Post a Comment