சவூதியில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கென புதிய விதி முறைகள் அறிமுகம்
இது குறித்து தொழில் அமைச்சர் ஆதில் ஃபாகிஹ் தெரிவிக்கையில்,
வீட்டுப் பணிப் பெண்களைப் பொறுத்தவரையில் அவர்கள் இஸ்லாத்தையும அதன் போதனைகளையும் மதித்து நடப்பதுடன் வேலை ஒப்பந்தப்படி அமைந்த பணிகளைச் செய்விப்பது சம்பந்தமாக வேலை கொள்வோருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் கீழ்ப்படிந்து ஒழுகவும் வேண்டுமெனவும் வீட்டுப் பணியாளரொருவர் போதிய காரணமின்றி பணியொன்றை நிராகரிக்கவோ அல்லது வேலையொன்றை விட்டுச்செல்லவோ உரிமையற்றவரெனவும் குறிப்பிட்டார். ஆயினும் புதிய விதிமுறைகளின் பிரகாரம், தங்களின் ஒப்பந்தங்களின் மூலம் பணியாளர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்ட வேதனக் கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய உரிமைகளை வேலை கொள்வோர் உரியவாறு வழங்க வேண்டும். அமைச்சர் ஃபாகிஹ் இது பற்றி மேலும் கூறுகையில்,
வேலை கொள்வோர் ஒத்துக்கொள்ளப்பட்ட மாதாந்த சம்பளத்தை பணியாளர்களுக்குத் தாமதமின்றி வழங்குவதுடன் அவர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விரும்பும் பொருத்தமான இருப்பிட வசதிகளும் அவர்கள் இளைப்பாறும் பொருட்டு நாளாந்தம் ஆகக் குறைந்தது ஒன்பது மணித்தியால ஓய்வும் வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
இத்தகைய புதிய வழி முறைகளின் கீழ் பணியாளர்கள் இரண்டு வருட கால சேவையின் பின்னர் சுகவீன விடுப்பு மற்றும் ஒரு மாத கால சம்பளத்துடனான பருவ விடுமுறை மற்றும் நான்கு வருட கால சேவையின் பின்னர் ஒருமாத கால சம்பளத் தொகைக்குச் சமனான சேவையின் முடிவிலான ஈட்டுத் தொகை ஆகியவற்றை பெற்றுக் கொள்ள உரித்துடையவராவார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனது வீட்டு எஜமானின் குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த வீட்டுப் பணிப் பெண்ணாண ரிஸானா நபீக்கை அமெரிக்க ஆதரவு பெற்ற சவூதி அரேபிய அரசு சிரச்சேதம் செய்ததை அடுத்து வெளிநாட்டு வீட்டுப் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்து இந்த வருட முற்பகுதியில் சவூதி அரேபியா சர்வதேசத்திடமிருந்து வசைப்பெயரை வாங்கியிருந்தது.
மனித உரிமைகள் காப்பகம் இது குறித்து வெளியிட்டிருந்தஅறிக்கையொன்றில் சவூதி அதிகாரிகள் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைக்கவென ரிஸானாவை சிறையில்பூட்டி வைத்தனர்’’ எனக் குற்றம் சுமத்தியிருந்தது. ரிஸானாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து இலங்கை அரசாங்கம் தனது தூதுவரைத் திருப்பி அழைத்திருந்தது.
சவூதி அரேபியாவில் பணியாற்றி வரும் சுமார் எட்டு மில்லியன் வெளிநாட்டுப் பணியாளர்களில் அதிகமானோர் தெற்காசியாவைச் சேர்ந்தவர்களென்பது குறிப்பிடத்தக்கது.
சவூதியில் உள்ள வெளிநாட்டு பணியாளர்களுக்கென புதிய விதி முறைகள் அறிமுகம்
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:
Reviewed by Admin
on
July 19, 2013
Rating:


No comments:
Post a Comment