உணவு நஞ்சு: 19 சிறார்களின் உடல்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே புதைக்கப்பட்டன
அரசின் கவனயீனத்தாலேயே தங்களின் குழந்தைகள் பலியானதன் அடையாளமாக இந்த இடங்கள் இருக்க வேண்டும் என்று கோபத்துடன் உள்ள பெற்றோர் கூறுகின்றனர்.
தொடர்புடைய விடயங்கள் துஷ்பிரயோகம், மனித உரிமை நேற்று முன்தினம் இலவச மதிய உணவில் சோறும் சோயா பருப்பும் உட்கொண்ட 47 பள்ளிச்சிறார்கள் கடுமையாக சுகவீனமுற்றனர்.
இவர்களில் 22 சிறார்கள் உயிரிழந்துள்ளனர். எல்லோருமே 12 வயதுக்கும் குறைவான பிள்ளைகள். உணவுப் பொருட்களில் சேர்ந்துள்ள ஒருவகை இரசாயன உரக் கலவையே உணவு நஞ்சானமைக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
சாரன் மாவட்டத்தில் தர்மசடி கண்டாமன் என்ற கிராமத்திலுள்ள இந்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
உணவு நஞ்சு: 19 சிறார்களின் உடல்கள் பள்ளிக்கூட வளாகத்திலேயே புதைக்கப்பட்டன
Reviewed by Admin
on
July 18, 2013
Rating:

No comments:
Post a Comment