அண்மைய செய்திகள்

recent
-

படகு மூலம் ஆஸி. வருபவர்களுக்கு குடியுரிமை ஒருபோதும் கிடையாது: அவுஸ்­தி­ரே­லி­யா திட்டவட்டம்

இலங்­கை­யி­லி­ருந்து பட­குகள் மூலம் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அவுஸ்­தி­ரே­லிய எல்­லைக்குள் வரு­கின்ற எவ­ருக்கும் அவுஸ்­தி­ரே­லிய குடி­யு­ரிமை ஒரு­போதும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்­ப­தனை உறு­தி­யாக அறி­விக்­கின்றோம். எனவே உயிரை ஆபத்­துக்கு உட்­ப­டுத்­தியும் பணத்தை இழந்தும் சட்­ட­வி­ரோத படகுப் பய­ணத்தில் ஈடு­ப­டு­வதன் மூலம் எந்தப் பயனும் கிடைக்­கப்­போ­வ­தில்லை என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக அறி­விப்­ப­தாக இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரதி உயர்ஸ்­தா­னிகர் சொன்யா கொப்பெ தெரி­வித்தார்.

மாறாக சட்­ட­வி­ரோ­த­மாக வரு­கின்­ற­வர்கள் அக­தி­க­ளாக இனம் காணப்­பட்டால் அவர்கள் மதிப்­பீட்டின் பின்னர் பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு நிரந்­த­ர­மாக அனுப்­பப்­ப­டு­வார்கள். அக­தி­க­ளாக இனம்­கா­ணப்­ப­டா­த­வர்கள் தாய்­நாட்­டுக்கு திருப்­பி­ய­னுப்பப்­ப­டு­வார்கள். எனவே உயிரை ஆபத்­துக்கு உட்­ப­டுத்தும் படகுப் பய­ணத்தில் ஈடு­ப­ட­வேண்டாம் என்று கோரு­கின்றோம் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

68 பேருடன் மற்­று­மொரு படகு சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஆஸி.யின் எல்­லையை நேற்­றி­ரவு (நேற்­று­முன்­தினம்) அடைந்­துள்­ளது. அதில் வந்­த­வர்கள் அகதி­க­ளாக இனம்­கா­ணப்­பட்டால் நிரந்­த­மாக பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு அனுப்­பப்­ப­டு­வார்கள் என்றும் அவர் கூறினார்.

சட்­ட­வி­ரோத படகுப் பய­ணங்­களை மேற்­கொண்டு அவுஸ்­தி­ரே­லியா செல்­கின்­ற­வர்கள் தொடர்பில் அவுஸ்­தி­ரே­லி­யா­வினால் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள புதிய சட்­ட­திட்­டங்கள் குறித்து தெளி­வு­ப­டுத்தும் ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று கொழும்பு சின்­னமன் கிரான்ட் ஹோட்­டலில் நடை­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யிட்ட இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரதி உயர்ஸ்­தா­னிகர் சொன்யா கொப்பெ மேற்­கண்ட விட­யங்­களை குறிப்­பிட்டார்.

இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் கொன்­சி­யூலர் பணிப்­பாளர் சு நைட் மற்றும் ஆஸி. குடி­­வ­ரவு குடி­யு­ரிமை திணைக்­க­ளத்தின் தெற்­கா­சிய பிராந்­திய பணிப்­பாளர் ஜோஸ் அல்வாஸ் ஆகி­யோரும் இந்த செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்­டனர்.

அவுஸ்­தி­ரே­லி­யாவின் பிரதி உயர்ஸ்­தா­னிகர் சொன்யா கொப்பெ மேலும் குறிப்­பி­டு­கையில்

இலங்­கை­யி­லி­ருந்து பட­குகள் மூலம் அவுஸ்­தி­ரே­லியா வரு­கின்­ற­வர்­க­ளுக்கு இனிமேல் அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­ய­மரும் சந்­தர்ப்பம் கிடைக்­க­மாட்­டாது என்­ப­தனை திட்­ட­வட்­ட­மாக அறி­விக்­கின்றோம். சட்­ட­வி­ரோ­த­மாக வரு­கின்­ற­வர்கள் உட­ன­டி­யாக மதிப்­பீட்­டுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு அக­தி­க­ளாக அடை­யாளம் காணப்­ப­டு­கின்­ற­வர்கள் பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு நிரந்­த­ர­மாக அனுப்­பப்­ப­டு­வார்கள். அக­தி­யாக இனம் காணப்­ப­டா­த­வர்கள் உட­ன­டி­யாக இலங்­கைக்கு திருப்பி அனுப்­பப்­ப­டு­வா ர்கள்.

இதற்கு ஏற்­ற­வ­கையில் அவுஸ்­தி­ரே­லி­யாவின் சட்­ட­திட்­டங்கள் மாற்­றப்­பட்­டுள்­ளன. ஜூலை மாதம் 19 ஆம் திக­தி­யி­லி­ருந்து புதிய முறைமை அமு­லுக்கு வரு­கின்­றது. இது தொடர்பில் அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் கெவின் ரட் உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பை வெளி­யிட்­டுள்ளார்.

இதற்­க­மைய அவுஸ்­தி­ரே­லி­யாவும் பப்­புவா நியு­கி­னி­யாவும் ஒரு புதிய உடன்­ப­டிக்­கையில் கைச்­சாத்­திட்­டுள்­ளன. அதா­வது வீசா இன்றி சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வரு­கின்ற அனை­வரும் பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு அனுப்பப்­ப­டு­வார்கள். அங்கு அவர்­களின் கோரிக்கை பரி­சீ­லிக்­கப்­பட்டு அக­தி­க­ளாக இனம்­கா­ணப்­பட்டால் பப்­புவா நியு­கி­னி­யாவில் நிரந்­த­ர­மாக குடி­யேற்­றப்­ப­டு­வார்கள். அக­திகள் அல்­லா­விடின் தாய்­நாட்­டுக்கு திருப்­பி­ய­னுப்­பப்­ப­டு­வார்கள்.

அவுஸ்­தி­ரே­லி­யாவும் பப்­புவா நியு­கி­னி­யாவும் செய்­து­கொண்­டுள்ள புதிய உடன்­ப­டிக்கை விடுக்கும் செய்தி மிகவும் தெளி­வா­னது. அதா­வது மக்கள் மேற்­கொள்ளும் சட்­ட­வி­ரோ­த­மான படகுப் பய­ண­மா­னது மிகவும் ஆபத்­தா­னது என்­ப­துடன் அந்த பயணம் பய­னற்­றது. எக்­கா­ரணம் கொண்டு இவ்­வாறு வரு­கின்­ற­வர்­க­ளுக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யு­ரிமை வழங்­கப்­ப­ட­மாட்­டாது என்­பதே தெளி­வான முறையில் விடுக்­கப்­படும் செய்­தி­யாகும்.

பெண்கள் மற்றும் குழந்­தைகள் என்ற வித்­தி­யா­ச­மின்றி அனை­வரும் பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு அனுப்­பப்­ப­டு­வார்கள். பப்­புவா நியு­கி­னி­யாவில் உள்ள மனுஸ்­தவில் வைத்து இவர்­களின் கோரிக்­கையை பப்­புவா நியு­கி­னியா அதி­கா­ரிகள் பரி­சீ­லனை செய்­வார்கள். மேலும் பப்­புவா நியு­கி­னி­யாவில் அக­தி­களை தங்­க­வைக்கும் இடங்­களை விரி­வு­ப­டுத்­து­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும்.

இதே­வேளை இலங்­கை­யி­லி­ருந்து பட­குகள் மூலம் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் அவுஸ்­தி­ரே­லியா வரு­ப­வர்­களின் கார­ணங்கள் தொடர்பில் ஆஸி. தொடர்ந்தும் விரை­வான முறையில் மதிப்­பிட்­டு­வ­ரு­கின்­றது. 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து இது­வரை 1300 பேர் இலங்­கைக்கு திருப்­பி­ய­னுப்­­பப்­பட்­டுள்­ளார்கள். இந்த முறை­மைகள் தொடர்ந்தும் பின்­பற்­றப்­படும். பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு அனுப்­பப்­படும் அதி­கூ­டிய மக்கள் தொகை குறித்து எவ்­வி­த­மான கட்­டுப்­பா­டு­களும் விதிக்­கப்­ப­ட­வில்லை.

அதா­வது பட­குகள் மூலம் ஆட்­க­டத்­தல்­களை மேற்­கொள்­ப­வர்­க­ளிடம் உங்கள் பணத்தை இழக்­கா­தீர்கள் என்று கோரிக்கை விடுக்­கின்றோம். ஆட்­க­டத்­தல்­கா­ரர்­க­ளுக்கு வழங்­கப்­படும் பணம் விரயம் ஆகு­வ­துடன் உங்கள் உயி­ரையும் ஆபத்­துக்கு உட்­ப­டுத்தும் நிலை­மையே உரு­வா­கின்­றது. இதனை படகுப் பய­ணங்­களை மேற்­கொள்ள முயல்வோர் சரி­வர புரிந்­து­கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இதே­வேளை இலங்­கை­யி­லிருந்து சட்­ட­வி­ரோ­த­மாக பட­கு­களில் அவுஸ்­தி­ரே­லியா வரு­கின்­ற­வர்­களை தடுப்­பது தொடர்பில் இலங்­கையும் அவுஸ்­தி­ரே­லி­யாவும் ஒத்­து­ழைப்­புடன் இணைந்து பணி­யாற்­று­கின்­றது. இலங்­கையின் கடற்­ப­டை­யினர் சிறந்த சேவையை ஆற்­று­கின்­றனர். அண்­மையில் கூட படகு ஒன்று இலங்கை கடற்­ப­டை­யினால் மீட்­கப்­பட்­டி­ருந்­தது. அந்­த­வ­கையில் இரண்டு நாடு­களும் சிறந்த முறையில் ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றன. தொடர்ந்தும் இவ்­வாறு ஒத்­து­ழைப்­புடன் செயற்­பட்டு இந்த சட்­ட­வி­ரோத படகுப் பய­ணத்தை தடுப்போம் என்றார்.

செய்­தி­யாளர் மாநாட்டில் இலங்­கைக்­கான அவுஸ்­தி­ரே­லிய உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் கொன்­சி­யூலர் பணிப்­பாளர் சு நைட் குறிப்­பி­டு­கையில்,

சட்­ட­வி­ரோதப் படகுப் பய­ண­மா­னது மிகவும் ஆபத்­தா­னது என்­ப­தனை மனதில் கொள்­ளுங்கள். இந்த செயற்­பாடு உயி­ரா­பத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. இவ்­வாறு உயி­ரா­பத்து ஏற்­ப­டு­வ­தனால் உங்கள் குடும்­பத்­தி­னரும் குடும்ப உற­வி­னர்­களும் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர். இவ்­வாறு ஆபத்­தான படகுப் பய­ணத்தை மேற்­கொண்டு அவுஸ்­தி­ரே­லியா வந்­தால்­கூட அங்கு அவர்­க­ளுக்கு குடி­யு­ரிமை ஒரு­போதும் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. அண்­மையில் கூட அக­திகள் வந்த படகு ஒன்று கவிழ்ந்­ததில் 9 பேர் உயி­ரி­ழந்­தனர். இதில் இலங்­கை­யர்­களும் உள்­ள­டங்­கு­கின்­றனர். இதனால் இவர்­களின் குடும்­பத்­தினர் பாதிக்­கப்­ப­டு­கின்­றனர்.

68 பேருடன் மற்­று­மொரு படகு சட்­ட­வி­ரோ­த­மான முறையில் ஆஸி.யின் எல்­லையை நேற்­றி­ரவு ( நேற்­று­முன்­தினம்) அடைந்­துள்­ளது. அதில் வந்­த­வர்கள் அகதி­க­ளாக இனம்­கா­ணப்­பட்டால் நிரந்­த­மாக பப்­புவா நியுகினியாவுக்கு அனுப்பப்படுவார்கள். இதில் இலங்கையர்களும் உள்ளடங்குகின்றனர். அகதிகளாக இனம் காணப்படுகின்றவர்கள் பப்புவா நியுகினியாவிலேயே நிரந்தரமாக குடியமர்த்தப்படுவார்கள். இவ்வாறு சட்டவிரோத படகுப் பயணங்கள் குறித்து இதுவரை பத்திரிகை விளம்பரங்களை மேற்கொண்டு வந்தோம். விரைவில் தொலைக்காட்சி விளம்பரங்களையும் செய்யவுள்ளோம் என்றார்.

ஆஸி. குடிவரவு குடியுரிமை திணை க்களத்தின் தெற்காசிய பிராந்திய பணி ப்பாளர் ஜோஸ் அல்வாஸ் கருத்து வெளி யிடுகையில்,

சட்­ட­வி­ரோ­த­மாக ஆஸி. வருகின் றவர்கள் பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு அனுப்­பப்­பட்ட பின்னர் அவர்­களின் உற­வி­னர்கள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் இருந்­தாலும் கூட எங்கும் வைத்து இணைந்­து­கொள்ள முடி­யாது. அவுஸ்­தி­ரே­லி­யாவில் உள்ள குடும்ப உற­வி­னர்கள் பப்­புவா நியு­கி­னி­யா­வுக்கு செல்ல அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள். எனவே இவற்றைக் கருத்­திற்­கொண்டு ஆபத்­தான படகுப் பய­ணத்தை தெரிவு செய்­ய­வேண்டாம் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
படகு மூலம் ஆஸி. வருபவர்களுக்கு குடியுரிமை ஒருபோதும் கிடையாது: அவுஸ்­தி­ரே­லி­யா திட்டவட்டம் Reviewed by NEWMANNAR on July 27, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.