அக்கராயன் குளத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
அக்கராயன் பகுதி கரைச்சி கிராம வாசியான 33 வயதான வேலு தங்கா என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கோயிலுக்குச் செல்வதற்காக நீராடுவதற்குச் சென்ற இப்பெண் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.
தேடிச் சென்ற பொழுது அவர் குளத்தில் வீழ்ந்து மரணமாகிக் கிடப்பது தெரிய வந்ததாக உறவினர்கள் கூறினர். இதுபற்றி அக்கராயன் பொலிஸ் சாவடியிலுள்ள பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்கள் கடற்படையினர் சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டனர்.
குளத்தில் விழுந்து இறந்த குறித்த பெண் அடிக்கடி வலிப்பு நோயால் அவஸ்தைப்படுபவர் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அக்கராயன் குளத்திலிருந்து யுவதியின் சடலம் மீட்பு
Reviewed by Admin
on
August 24, 2013
Rating:
No comments:
Post a Comment