யாழில் வட்டி,தற்கொலைகள் அதிகரிப்பு,விழிப்புணர்வு வேண்டும்.- பொலிஸார்
இவ் விடயம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், யாழ். குடா நாட்டில் தற்பொழுது மீற்றர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் செயற்பாடு அதிகரித்துள்ளன. கணவனுக்குத் தெரியாமல் மனைவியும் மனைவிக்குத் தெரியாமல் கணவனும் வட்டிக்கு பணத்தைப் பெற்றுக்கொள்கின்றனர். இப் பணத்தை மீளளிக்கமுடியாமையினால் தற்கொலை செய்கின்றனர்.
சில சந்தர்ப்பங்களில் மீற்றர் வட்டிக்கு பணம் வழங்குபவர்கள் பணத்தை பெற்றுக்கொண்டவர்களின் வீட்டையும் பொருட்களையும் அபகரிக்கும் நிலைமையும் குடாநாட்டில் காணப்படுகின்றது. இதேபோல் காசோலை மோசடியும் யாழ். மாவட்டத்தில் அதிகமாக இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் பெற்றுக்கொள்கின்ற காசோலையை கொழும்பிற்கு கொண்டு சென்று மாற்றவேண்டும்
. இதன்போது காசோலைக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுபவர்கள் உரிய நேரத்தில் வங்கியில் பணத்தை வைப்புச் செய்யாமல் ஏமாற்றி விடுகின்றனர். எனவே மோசடிகளைத் தவிர்த்துக் கொள்வதற்காக பொதுமக்கள் வட்டிக்கு பணத்தைப் பெற்றுக்கொள்ளாமல் விழிப்புடன் செயற்படல் வேண்டும். அரசாங்க உரிமம் உள்ள வங்கிகளில் கடனைப் பெற்றுக்கொள்வது பொதுமக்களுக்கு ஆரோக்கியமானதாக அமையும் என்றார்.
யாழில் வட்டி,தற்கொலைகள் அதிகரிப்பு,விழிப்புணர்வு வேண்டும்.- பொலிஸார் 
 Reviewed by Admin
        on 
        
August 04, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
August 04, 2013
 
        Rating: 
       Reviewed by Admin
        on 
        
August 04, 2013
 
        Rating:
 
        Reviewed by Admin
        on 
        
August 04, 2013
 
        Rating: 

 
 
.jpg) 

 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment