கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி
கோவில்கள் உடைக்கப்பட்டமை, கோவில் உடைமைகள் கொள்ளையிடப்பட்டமை ஆகியன தொடர்பில் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தே கவனயீர்ப்பு பேரணி இடம்பெற்றது.
மாங்காடு மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்ற வழிபாடுகளை அடுத்து ஆலய முன்றலில் இருந்து ஆரம்பமான இந்த கவனயீர்ப்பு பேரணி குருக்கள் மடம் ஸ்ரீ செல்லக் கதிர்காம ஆலயம் வரை நடைபெற்றது. "யாரிடம் நோவோம் யார்க் கொடுத்துரைப்போம்" எனும் தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு பேரணி நடைபெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பி. அரியநேந்திரன் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம், இரா. துரைரட்ணம், பிரசன்னா இந்திரகுமார் உட்பட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்த்தர்கள் பலர் கலந்துகொண்டனர்.
குருக்கள் மடம் மற்றும் மாங்காடு உட்பட பல பிரதேசங்களிலுள்ள இந்துக் கோவில்கள் இனந்தெரியாதோரினால் கடந்த மே முதலாம் திகதி உடைக்கப்பட்டதுடன் சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு பேரணி
Reviewed by Admin
on
August 04, 2013
Rating:
No comments:
Post a Comment