மன்னாரில் இதுவரை எவ்வித தேர்தல் வன்முறைகளும் இடம் பெறவில்லை.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
மன்னாரில் மாவட்டத்தில் தேர்தல் வன்முறைகள் எவையும் பாரிய அளவில் இடம் பெறவில்லை.ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் பெயர் பலகைக்கு கழிவு ஒயில் பூசியமை தொடர்பாக மட்டுமே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றோம்.எல்லாக்கட்சிகளும் ஒற்றுமையுடன் செயற்பட்டு வருகின்றனர். தேர்தல் வன்முறைகள் தொடர்பாக கட்சித்தலைவர்களுக்கும்,வேட்பாளர்களுக்கும் அறிவித்தல்களை வழங்கியுள்ளோம்.
இதன் அடிப்படையில் நாங்கள் எதிர்பார்த்த படி அனைத்துக்கட்சிகளும் வன்முறைகள் இன்றி தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.என மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஐ.துசார தலுவத்த மேலும் தெரிவித்தார்.
மன்னாரில் இதுவரை எவ்வித தேர்தல் வன்முறைகளும் இடம் பெறவில்லை.
Reviewed by Admin
on
September 18, 2013
Rating:
No comments:
Post a Comment