வெலிஓயாவில் மீளக்குடியேறிய மக்களுக்காக 500 வீடுகள் நிர்மாணம்
வெலிஓயா பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு நிரந்த வீடுகள் கையளிக்கப்படவுள்ளன. குறித்த பிரதேச மக்களுக்காக மீள்குடியேற்ற அமைச்சினால் 500 நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகள் உரிய பயனாளிகளிடம் இன்று புதன்கிழமை கையளிக்கப்படவுள்ளன.
மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்த நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நீhப்;பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த பிரதேசத்தில் இரண்டாம் கட்டமாக 357 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.
இதற்கான வேலைதிட்டமும் இதன்போது ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது.
இந்த வீட்டு திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு, பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள் அமைச்சு, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுத்து வருகின்றன.
இந்த வீட்டுத் திட்டத்தில் வீடொன்றைக் கட்டுவதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 3 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது.
இத்திட்டம் மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படுவதால் வீடொன்றின் பெறுமதி ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியானதாக அமைகின்றது.
வெலிஓயாவில் மீளக்குடியேறிய மக்களுக்காக 500 வீடுகள் நிர்மாணம்
Reviewed by Admin
on
September 17, 2013
Rating:

No comments:
Post a Comment