அண்மைய செய்திகள்

recent
-

போனஸ்' ஆசனத்தில் ஒன்றை நிர்மலநாதன் சாள்ஸ்சிற்கு வழங்கவும்-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம்.

வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களில் மூன்று வேட்பாளர்கள் வெற்றிபெற்றுள்ளனர். ஆனால் தமிழ் தேசியத்திற்காகவும் தமிழ் மக்களின் விடிவிற்காகவும் தனது சுய கௌரவத்தை துற்சமென நினைத்து இத்தேர்தலில் போட்டியிட்ட மன்னார் மாவட்த்தின் பிரபல வர்த்தகர் நிர்மலநாதன் சாள்ஸ் ஒரு சில வாக்குகளால் தன் ஆசனத்தை இழந்துள்ளார்.


 எனவே வடமாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு 'போனஸ்' ஆசனங்களில் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட வேட்பாளரான சாள்ஸ் நிர்மலநாதனிற்கு வழங்க வேண்டுமென மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் பொதுவான கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

 இது தொடர்பாகஅவ் ஒன்றியம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் ,,,,,,,

 வடமாகாண சபை தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் பிரபல வர்த்தகரான நிர்மலநாதன் சாள்ஸ் போட்டியிட்டார். இவர் தன்னலம் பாராது மன்னார் மாவட்டத்pன் இளைஞர்,யுவதிகளின் விடிவிற்காகவும் தமிழ் பேசும் மக்களின் விடிவிற்காகவும் பல்வேறு அழுத்தங்களின் மத்தியில் இந்த வடமாகாண சபை தேர்தலில் களமிறங்கினார். இந்தநிலையில் வேட்புமனுத்தாக்கல் செய்யப்பட்ட நிலையிலிருந்து தேர்தல் காலம் வரை மக்களின் நலனுக்காகவும்,தமிழ் தேசியத்திற்காகவும் தொடர்ந்தும் பாடு பட்டு வந்தார்.

 இவரது சேவையினை சகித்துக்கொள்ள முடியாத ஒரு சில உள் சக்திகள் இவருக்கெதிராகவும் தமிழ் தேசியத்தை கொச்சைப்படுத்தும் முகமாவும் பல் வேறுபட்ட துண்டுபிரசுரங்களை வெளியிட்டுள்ளனர். இதனை மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் வன்மையாக கண்டித்துள்ளது. இந்த துண்டு பிரசுரத்தின் எதிரொழியாக அவர் சொற்ப வாக்குகளினால் தோல்வியைச் சந்தித்துள்ளார். இச்சம்பவம் மன்னார் மாவட்டதின் ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களையும் கதி கலங்க வைத்துள்ளது.

 எனினும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவம் இறுதி முடிவை எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. எனவே பல்வேறுபட்ட நெருக்குவாதத்தின் மத்தியில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளினால் ஆசனத்தை இழந்த சாள்ஸ் அவர்களுக்கு 'போனஸ்' ஆசனம் வழங்கப்பட வேண்டும். இது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட ஆதரவாளர்களின் ஒட்டு மொத்த கோரிக்கையாக அமைந்துள்ளது.

எனவே தமழ் தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவம் இவ்விடையத்தில் அக்கறை செலுத்தி மன்னார் மாவட்ட மக்களில் ஒட்டு மொத்த கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு தனது சகல வசதிகளையும் புறக்கணித்து விட்டு இத்தேர்தலில் களமிறங்கி தமிழ் பேசும் மக்களின் குரலாக ஒலித்த நிர்மலநாதன் சாள்ஸ் என்பவருக்கு 'போனஸ்' ஆசனத்தை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.என மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
போனஸ்' ஆசனத்தில் ஒன்றை நிர்மலநாதன் சாள்ஸ்சிற்கு வழங்கவும்-மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியம். Reviewed by Admin on September 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.