அண்மைய செய்திகள்

recent
-

தேர்தல் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு கூட்டமைப்பினர் பாராட்டு.

.வட மாகாண சபைக்கான தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றபோது வாக்கு எண்ணும் நிலையங்களில்
கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தமை தமக்கு மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்துவதாகவும் கடமையில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் வினைத்திறனாகவும் சேவை மனப்பாங்குடனும் நேர்மையாகவும் நடந்து கொண்டுள்ளனர் என கூட்டமைப்பின் வேட்பாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் .

வடக்கு மாகாண சபைக்காக நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்கு எண்ணும் நிலையங்களிலும் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் மிக நேர்மையாக நடந்து கொண்டனர் என கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர் . குறிப்பாக யாழ் . மாவட்ட தேர்தல் பிரிவுக்கு வாக்கு எண்ணும் நிலையமாக அறிவிக்கப்பட்டிருந்த யாழ் . மத்திய கல்லூரியில் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் எந்தவொரு தலையீடுகளுமின்றி சுயாதீனமாகத் தமது கடமைகளில் ஈடுபட்டனர் .

இதேபோல் வடக்கிலுள்ள ஏனைய மாவட்டங்களில் அமைக்கப்பட்ட வாக்கு எண்ணும் நிலையங்களில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களும் மிக நேர்த்தியாகத் தமது கடமைகளை நிறைவேற்றியுள்ளனர் எனவும் கூட்டமைப்பினர் தெரிவிக்கின்றனர் .

அத்துடன் வடக்கில் கண்காணிப்புக் கடமைகளில் ஈடுபட்ட தேர்தல் கண்காணிப்பு நிறுவனங்களின் பிரதிநிதிகளும் சர்வதேச கண்காணிப்பாளர்களும் இத்தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் ஜனநாயக முறைக்கமையவும் நடைபெறவேண்டும் என்பதில் அக்கறையுடன் செயற்பட்டனர் எனவும் கூட்டமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர் .

இதேவேளை வாக்கெண்ணும் நிலையங்களில் துரிதமாகச் செயற்பட்டு விரைவாகத் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு உதவிய தேர்தல் திணைக்கள அதிகாரிகளையும் உத்தியோகத்தர்களையும் கூட் டமைப்பினர் பாராட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது


தேர்தல் கடமைகளில் ஈடுபட்டவர்களுக்கு கூட்டமைப்பினர் பாராட்டு. Reviewed by Admin on September 23, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.