கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்கள் கோரல்
கிறீன் கார்ட் லொத்தர் என அழைக்கப்படும் பச்சை அட்டை அதிர்ஷ்டக் குலுக்கல் மூலம் அமெரிக்காவிற்கான பல்வகைமை குடியேற்ற வீசா நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"மேற்படி நிகழ்ச்சித் திட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் 2013 ஒக்டோபர் 01ஆம் திகதி இலங்கை நேரம் பிற்பகல் 09.30 மணி முதல் 2013 நவம்பர் 02ஆம் திகதி பிற்பகல் 09.30 மணி வரை இணையத்தளத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். அதிர்ஷ்ட குலுக்கல் மூலம் பல்வகைமை குடியேற்ற வீசா வழங்கும் வருடாந்த நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மற்றும் மாலைதீவுகள் உட்பட தகைமை வாய்ந்த
நாடுகளில் பிறந்தோருக்கு குடியேற்ற வீஸா பெறும் வகையில் நேர்காணலுக்கான ஒரு சந்தர்ப்பம் எழுந்தமானமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்கவில் சட்டபூர்வமான நிரந்தர குடிமக்களாக கருதப்படுவதற்கான குடிவரவு விஸாக்களுக்கு தகைமை பெறுவார்கள்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் விபரமான ஆலோசனைகளையும், தகைமைகளையும் கண்டறிவதற்கு ஆர்வம் கொண்டுள்ளீர்களாயின் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயத்தின் www.srilanka.usembassy.gov/visas/diversityvisa- lottery-program.html என்ற இணைய தளத்தைப் பரிசீலிக்கவும். அதிர்ஷ்டக்குலுக்கலுக்கு விண்ணப்பிப்பதற்காக www.dvlottery.state.govஎன்ற இணையதளத்தை பார்வையிடவும்"
இது தொடர்பில் கொழும்பிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதுவராலயம் வழங்கியுள்ள சில ஆலோசனைகள்:
2013 ஒக்டோபர் 1ஆம் திகதி முதல் நவம்பர் 02ஆம் திகதி வரையிலான கால எல்லையில் அதிர்ஷ்டக் குலுக்கலுக்கான விண்ணப்பப் படிவம் ஏற்றுக்கொள்ளப்படும்.
இலங்கை மாலைதீவுகள் உட்பட ஒரு சில நாடுகளில் பிறந்தோருக்கு மாத்திரமே அதிர்ஷ்டக் குலக்கலுக்கு விண்ணபிக்க முடியும்.
ஒருமுறை மாத்திரமே நீங்கள் விண்ணப்பிக்க முடியும். பலமுறை விண்ணப்பித்தால் அதன் பெறுபேறாகத் தகைமையை இழக்க நேரிடும்.
பல்வகைமை விஸாவிற்குத் தேவையான தகைமைகளான கல்வித் தகைமையையும் தொழில் அனுபவத் தகைமையையும் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே, விண்ணப்பிப்பதற்கு முன்னர் உங்களுக்குத் தேவையான தகைமைகளையிட்டு நிச்சயித்துக் கொள்ளுங்கள்.
இணையதளத்தில் உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர், அதற்கான உறுதிப்படுத்தப்பட்ட இலக்கம் வழஙக்ப்படும். நீங்கள் விஸா நேர்காணலுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என இந்த இலக்கத்தைக் கொண்டே பரிசீலனை செய்து பார்க்க முடியும். எனவே, இவ்விலக்கத்தைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள்.
இணைய தளத்திற்கான விண்ணப்பம் முற்றிலும் இலவசமானது – எதுவித மறைமுகமான செலவுகளும் கிடையாது.
ஐக்கிய அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புகொண்டவர்கள் எனத் தம்மை அறிமுகப்படுத்தும் போலித் தனிநபர்களுக்கோ அல்லது நிறுவனங்களுக்கோ ஏமாற வேண்டாம்.
தெரிவு செய்யப்படுவது தொடர்பில் முன்வைக்கப்படும் போலி உறுதிமொழிகளை நம்ப வேண்டாம்.
விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்வதற்கும் சமர்ப்பிப்பதற்கும் 3ஆம் தரப்பினருடைய உதவி தேவையில்லை.
அடுத்த நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்கள்
2014 மே மாத ஆரம்பத்தில் விண்ணப்பதாரிகள் www.dvlottery.state.govஎன்ற இணையதளத்தைப் பார்வையிட்டு விஸாவிற்கான நேர்காணலுக்கு நீங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளீர்களா என பரிசலிக்க முடியும். நீங்கள் தெரிவு செய்யப்பட்டு இருப்பின் ஐக்கிய அமெரிக்க பேராளர் அதிகாரியோடு ஒரு நேர்காணல் இடம்பெறும். நீங்கள் விஸாவைப் பெறத் தகுதி பெற்றுள்ளீர்களா என அவரே தீர்மானிப்பார்.
கிறீன் கார்ட் லொத்தர் விண்ணப்பங்கள் கோரல்
Reviewed by Admin
on
September 30, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment