அண்மைய செய்திகள்

recent
-

போக்­கு­வ­ரத்து பஸ்­களில் கெம­ராக்கள் பொருத்தத் திட்டம்.போக்­கு­வ­ரத்து அமைச்சர் குமார வெல்­கம.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஜி.பி. எஸ் . மற்றும் பாதுகாப்புக் கெமராக்களை பொருத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது . 

 ஜி.பி. எஸ் தொழில்நுட்பத்தின் ஊடாக பஸ்ஸின் வேக எல்லை , பயணிக்கும் இடம் , எரிபொருள் பயன்பாடு , பயண முடிவை அடைவதற்குத் தேவையான நேரம் , பஸ்ஸின் தொழில்நுட்ப நிலை போன்ற விடயங்களை அறிய முடியும் என போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார் . 

 உரிய முறையில் பயணச் சீட்டு விநியோகிக்கப்படாமை , பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளாமல் பஸ்ஸில் பயணிப்போர் , பஸ்களுக்குள் இடம்பெறுகின்ற ஒழுக்கமற்ற செயல்கள் மற்றும் டீசல் திருட்டு போன்ற விடயங்களைப் பாதுகாப்புக் கெமராக்கள் மூலம் கண்காணிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் . 

 நாடளாவிய ரீதியில் சேவையில் ஈடுபடுகின்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு இந்த தொழில்நுட்ப வசதி வழங்கப்படவுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது .
போக்­கு­வ­ரத்து பஸ்­களில் கெம­ராக்கள் பொருத்தத் திட்டம்.போக்­கு­வ­ரத்து அமைச்சர் குமார வெல்­கம. Reviewed by Admin on September 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.