மன்னார் நானாட்டானில் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு-மக்கள் மத்தியில் அச்சம்.-படங்கள்
நேற்று முந்தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி தொடக்கம் 7 மணி வரையுமான நேரப்பகுதிக்குள் குறித்த ஆலயத்தினுள் சென்ற இனம் தெரியாத நபர்கள் கண்ணாடிக்கூண்டினுள் வைக்கப்பட்டிருந்த ஒன்றரை அடி உயரம் கொண்ட அடைக்கல மாதா திருச்சொரூபத்தை வெளியில் எடுத்து அச்சொரூபத்திற்கு போடப்பட்டிருந்த ஆடை களட்டப்பட்டு அதே இடத்தில் வைக்கப்பட்ட நிலையில் சொரூபம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ஆலயத்தில் பணி புரிகின்ற ஒருவர் ஆலயத்தினுள் சென்று பார்த்த போது மாதாவின் சொரூபம் அங்கு இல்லாதமை தெரிய வந்தது.உடனடியாக குறித்த ஆலயத்தின் நிர்வாக சபையினர் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இந்த நிலையில் முருங்கன் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை குறித்த ஆலயத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது இராணுவத்தினரும் வருகை தந்திருந்தனர். நேற்று மாலை 3.30 மணியளவில் தடையங்களை கண்டறியும் பொருட்டு மோப்ப நாய் கொண்டு வரப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்பட்டது.
மோப்ப நாய் நீண்ட தூரம் ஓடிய போதும் எவ்வித தடயங்களும் மீட்கப்படவில்லை. இறுதியாக களட்டப்பட்டு கிடந்த மாதாவின் உடையினை முருங்கன் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.குறித்த சொரூபம் திருடிச் செல்லப்பட்ட சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளனது. இதே வேளை கடந்த வியாழக்கிழமை அதிகாலை மன்னார் முருங்கன் புராதன ரஜ மஹா விகாரையில் உள்ள 6 புத்தர் சிலைகள் இனம் தெரியாத நபர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மன்னார் நானாட்டானில் 178 வருடங்கள் பழைமை வாய்ந்த அடைக்கல மாதா திருச் சொரூபம் திருட்டு-மக்கள் மத்தியில் அச்சம்.-படங்கள்
Reviewed by Admin
on
October 01, 2013
Rating:
No comments:
Post a Comment