அண்மைய செய்திகள்

recent
-

வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு பாராட்டும் கௌரவ வரவேற்பும் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது.

மன்னார் ஆண்டான்குளம் பிரதேச அமைப்புக்களும், மக்களும் இணைந்து நடாத்திய மாபெரும் கோலாகலமான கௌரவ வரவேற்ப்பும் பாராட்டு வைபவத்தில் வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிபம் மற்றும் கிராமிய அபிவிருத்தி கௌரவ அமைச்சரும் சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் அவர்களை அவரது ஊர் மக்கள் சார்பாக அழைக்கப்பட்டு இன்று காலை ஆட்காட்டிவெளி புனித சவேரியார் ஆலயத்தில் விசேட நன்றி திருப்பலியுடன் ஆரம்பித்து திருப்பலி நிறைவின் பின்னர் ஆலய முன்றலில் இருந்து தமிழர் பண்பாட்டிற்கமைவாக வாத்தியங்கள் முழங்க மன்/ஆண்டான்குளம் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சர்வமதம் சார்பான ஆசி உரைகளும், பல பாராட்டு உரைகளும் இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வினோ நோகராதலிங்கம் அவர்களும் கலந்து சிறப்பித்தார். நிகழ்வின் இறுதியில் மதிய விருந்துபசாரமும் இடம்பெற்றது..


வட மாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு பாராட்டும் கௌரவ வரவேற்பும் அவரது சொந்த ஊரில் நடைபெற்றது. Reviewed by Admin on October 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.