அண்மைய செய்திகள்

recent
-

மன்னார்; பொன்தீவு கண்டல் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். - படங்கள்

மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கத்தோலிக்க கிராமமான பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது இடம் பெற்று வரும் நிலையில் இன்று திங்கட்கிழமை(28-10-2013) காலை பொன்தீவு கிராம மக்கள் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 1866 ஆம் ஆண்டு குடியேறிய நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக மாற்று மதத்தைச் சார்ந்த மக்கள் தற்போது மீள் குடியேற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு நானாட்டான் பிரதேசச் செயலாளர் துணை  போவதாக கூறி குறித்த கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை காலை நானாட்டான் பிரதேசச் செயலகத்திற்கு முன் பதாதைகளை ஏந்தியவாறு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் குறித்த பொன் தீவு கண்டல் கிராம மக்களின் பிரதி நிதிகளுக்கும் மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் எஸ்.சந்திரையா அவர்களுக்கும் இடையில் காலை 10.30 மணியளவில் விசேட சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன் போது மன்னார் நகர சபை முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம்,நகர சபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

இதன் போது இடம் பெற்ற பேர்ச்சுவார்த்தையின் பின் குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்தில் தற்போது இடம் பெற்று வரும் மீள் குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் உறுதியளித்தார். தற்போது காணி வழங்கப்பட்ட வேற்று மத மக்களை மதங்களுக்கிடையில் பிரிவினைவாதம் ஏற்படாத வாறு குறித்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக நானாட்டான் பிரதேசச் செயலாளர் உறுதியளித்துள்ளார். 

தற்போது குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்திற்கு அருகாமையில் குறித்த வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்காக அரச காணிகள் உள்ளதா என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறித்த காணிகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அந்த மக்கள் அவ்விடத்திலேயே குடியேற்றம் செய்யப்படுவார்கள் என பிரதேசச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.










மன்னார்; பொன்தீவு கண்டல் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம். - படங்கள் Reviewed by Admin on October 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.