மன்னாரில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் -படங்கள்
சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது
குறித்த நிகழ்வினை மன்னார் ஆர்.பி.ஆர் தன்னார்வு தொண்டு நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது.
MWDF இணைப்பாளர் திருமதி. மு.மகாலெட்சுமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் அரச அதிபர் எம்.வை.எஸ்.தேசபிரிய மற்றும் கௌரவ விருந்தினர்களாக திரு.ஜெகான் பெரேரா (திட்டப்பணிப்பாளர் தேசிய சமாதான பேரைவ கொழும்பு)மற்றும் சிறப்பு விருந்தினராக அருட்பணி.றெஜினோல்ட்,ஜனாப் ளு.யு.அஸீம் விமலரெட்ண தேரோ ஆகியோர் கலந்து கொண்டனர்
இன் நிகழ்வின் போது நாட்டிய நாடகம்,வில்லு பாட்டு,கூத்து ,சமூக நாடகம்,மேலைத்தேய நடனம், என்பன மிக சிறப்பாக நடைபெற்றது.
குறித்த நிகழ்வின் போது உதயம் செய்திமலர் வெளியீடு, R P R நிறுவனத்தின் இணையத்தள வெளியீடு என்பன அதிதிகளினால் வெளியீட்டு வைக்கப்பட்டது.
லுயிஸ் மார்சல் -
மன்னாரில் சர்வதேச சமாதான தின நிகழ்வுகள் -படங்கள்
Reviewed by Admin
on
October 13, 2013
Rating:
No comments:
Post a Comment