அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர் பா.டெனிஸ்வரன் முல்லை விஜயம்-பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திப்பு.(படங்கள் )

முல்லைத்தீவில் நேற்று சனிக்கிழமை இடம் பெற்ற திடீர் அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்ட
மீனவர்களை வடமாகாண மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா . டெனிஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முல்லைத்தீவிற்கு திடீர் விஜயம் செய்து பாதிக்கப்பட்ட மீனவர்களை நேரில் சென்று பார்வையிட்டார் .

- இதன் போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , எஸ் வினோ நோகராதலிங்கம் மற்றும் மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் ஆகியோரும் சென்றிருந்தனர் . .

- இன்று காலை முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துரையாடினர் இதன் போது மீனவர் ; கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை அவர்களிடம் தெரிவித்தனர் . .

இதனைத் தொடர்ந்து அனர்த்தம் இடம் பெற்ற கடற்கரை பகுதிக்குச் சென்று சேதமடைந்த படகுகளை பார்வையிட்டதோடு பாதீக்கப்பட்ட மீனவர்களையும் சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்டரிந்ததோடு பாதீக்கப்பட்ட மீனவர்களுக்கூறிய நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக அமைச்சர் பா . டெனிஸ்வரன் மீனவர்களுக்கு உறுதியளித்தார் .

இவர்களுடன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட வடமாகாண சபை உறுப்பினர்களான அன்ரன் ஜெயநாதன் , ரவிகரன் , கனக சுந்தர சுவாமி மேரி கமலா குனசீலன் ஆகியோரும் நேரில் சென்று மீனவர்களை பார்வையிட்டனர் .

-மன்னார் நிருபர்- (13-10-2013)

















அமைச்சர் பா.டெனிஸ்வரன் முல்லை விஜயம்-பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்திப்பு.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on October 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.