மன்னாரில் முதல் தடவையாக வடமாகாண ஆங்கில தின போட்டி (Photos)
வடமாகாண ஆங்கில தின போட்டி முதல் தடவையாக இம்முறை மன்னாரில் இடம் பெறுவதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எம்.சியான் தெரிவித்தார்.
-வட மாகாண ஆங்கில தின போட்டி இன்று வியாழக்கிழமை காலை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் ஆரம்பமாகியது.
குறித்த போட்டி எதிர்வரும் 12 ஆம் திகதி சனிக்கிழமை வரையிலான மூன்று தினங்கள் இடம் பெறவுள்ளது.
வடமாகாணத்தில் உள்ள 12 கல்வி வலயங்களையும் உள்ளடக்கியதாக இடம் பெறும் குறித்த போட்டியில் 400 பாடசாலைகளைச் சேர்;ந்த 4 ஆயிரம்; போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளதாக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் தெரிவித்தார்.
இன்று காலை 10 மணியளவில் மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் ஆரம்ப நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன் போது விருந்தினர்களாக மன்னார் மாவட்ட உதவி மாவட்டச் செயலாளர் என்.பரமதாஸ்,வடமாகாண கல்வி திணைக்களத்தின் ஆங்கில மொழிக்காண உதவிக்கல்விப்பணிப்பர் சோமஸ் கந்தராஜா,மன்னார் நகர முதல்வர்; எஸ்.ஞானப்பிரகாசம் மன்னார் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எம்.சியான் மற்றும் வலய கல்வி பணைமணையினைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது ஆங்கில மொழி மூலமான 11 நிகழ்வுகளும் இடம் பெற்று வருகின்றது.
(மன்னார் நிருபர்)
(10-10-2013)

Reviewed by NEWMANNAR
on
October 10, 2013
Rating:
No comments:
Post a Comment