அண்மைய செய்திகள்

recent
-

உரிமையும்,அபிவிருத்தியும் சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய வேண்டும்:அமைச்சர் டெனிஸ்வரன்

வடமாகாண சபை அமைச்சரும்,சட்டத்தரணியுமான பா.டெனிஸ்வரன் அவர்கள் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கையில் பின்வருமாறு தெரிவித்தார்;.

மீன்பிடி,போக்குவரத்து,கைத்தொழில்,வர்த்தக வாணிபம் மற்றும் கிராமஅபிவிருத்தி தொடர்பான அமைச்சுப்  பதவிக்கு என்னை தேர்ந்தெடுத்;தமைக்காக எமது கௌரவ வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களுக்கும்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் ஐயா அவர்களுக்கும்,பொதுச்செயளாலர் மாவைசேனாதிராஜா அண்ணன் அவர்களுக்கும்,விசேடமாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் (வு.நு.டு.ழு) தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் அண்ணன் அவர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றிகளை முதற்கண் தெரிவித்த கொள்வதோடு ,என்மீது நம்பிக்கைவைத்து,மிகப்பாரிய பொறுப்பினை மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளர்கள்;,அந்த நம்பிக்கையைக் கட்டிக்காத்து,குறித்த அமைச்சுப் பதவியின் கீழ் கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகளையும்,சலுகைகளையும் என் தமிழ் ,முஸ்லிம் மக்களுக்கு  இன,மத பேதமின்றி கொண்டு செல்வதே தனது முதன்மையான நோக்க என தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

என்னை நல்வழிப்படுத்தி,நேரியவழியில் வழிநடாத்திச் சென்ற அதிவந்தனைக்குரிய மறைமாவட்ட ஆயர் இராயப்புயோசப் ஆண்டகை, இந்துமதக் குருக்கள், இஸ்லாமிய பள்ளித் தலைவர்கள்,குருக்கள்,போதகர்கள்,அருட்சகோதரர்கள் மற்றும் அருட்சகோதரிகள் அனைவருக்கும் தனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு,அவர்களது வழிகாட்டல் தனது வாழ்க்கைப் பயணத்தில் இறுதிவரை நீடிக்கவேண்டு மென இறைவனை பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார்.

இன,மதபேதமின்றி எனது மக்களுக்கு எனது அமைச்சின் கீழ் வருகின்ற அனைத்து சேவைகளையும் அடிமட்ட வறியவர்களுக்கு கொண்டு செல்லப் இருப்பதோடு;,விசேடமாக யுத்தத்தில் உயிர் நீத்த ஒவ்வொரு நபர்களதும் குடும்பங்களையும்,பாதிகக்கப்பட்டவர்களையும் முன்னிலைப்படுத்தி,அவர்களை அபிவிருத்திப் பாதைக்குள் கொண்டுசென்று,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஏனைய சமூகங்களுக்கு நிகராக அவர்களுடைய வாழ்க்கைத் தராதரத்தினை உயர்த்த அனைத்து உதவிகளையும் அவர்களுக்கு வழங்க தயாராகவுள்ளேன்  

மேலும் தனது வெற்றிக்கு இரவுபகலாக தோளோடுதோள் கொடுத்து உழைத்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,மக்களுக்கும் விசேடவிதமாக தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதோடு;,தனது வெற்றிப்;பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துவைத்தது போலவே எமது மக்களுக்கு சேவையாற்ற தனது இளைய சமுதாயத்தை தயாராக இருக்கும்படியாக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் ஊடகங்களுக்கு அழித்த நன்றி கலந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லுயிஸ் மார்சல் - மன்னார்





உரிமையும்,அபிவிருத்தியும் சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய வேண்டும்:அமைச்சர் டெனிஸ்வரன் Reviewed by NEWMANNAR on October 14, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.