ஞானம்' கிறிஸ்தவ பாடல்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா -படங்கள்
ஞானம் கிறிஸ்தவ பாடல்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா இன்று காலை பேசாலை பங்குத்தந்தை அருட்பணி விக்ரர் அவிதப்பர் தலைமையில் பேசாலை புனித வெற்றிநாயகி ஆலய மண்டபத்தில்; நடைபெற்றது.
குறித்த பாடல்கள் இறுவெட்டு வெளியீட்டு விழாவினை அருட்பணி.ஜெயந்தன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதன் போது ஞானம் கிறிஸ்தவ பாடல்கள் முதலாவது இறுவெட்டினை அருட்தந்தை இராயப்பு வைபவரீதியாக வெளியிட்டு வைத்தார்.
குறித்த இறுவெட்டிற்கான இசை மற்றும் பாடல்கள் தென்னிந்திய கலைஞர்களினால் சிறந்த முறையில் உருவாக்கப்பட்டுள்ளது
பாடல்களுக்கான வரிகள் அருட்திரு.ஜெயந்தன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அருட்தந்தை இராயப்பு மற்றும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்டான்லி டி மெல் கௌரவ விருந்தினர்களாக வட மாகாண சபை உறுப்பினர் பிறிமுஸ் சிராய்வா , திரு.கே..பேனாட் பீடாதிபதி வவுனியா தேசிய கல்வியியற்கல்லூரி ,திரு.ஜே.கிளரன்ஸ் பீரிஸ் திட்ட பொறியியலாளர் இலங்கை செஞ்சிலுவை சங்கம் ,திரு.ஆர்.ஜே.பிரதீப் குருஸ் அறிவிப்பாளர் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் மற்றும் கோயில் நிர்வாகசபை உறுப்பினர்கள் , ஊர் மக்கள் , மற்றும் அழைக்ப்பட்ட பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஞானம்' கிறிஸ்தவ பாடல்கள் இறுவெட்டு வெளியீட்டு விழா -படங்கள்
Reviewed by Author
on
November 30, 2013
Rating:
No comments:
Post a Comment