அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் கிழக்கு, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் 25வது வெள்ளி விழா -படங்கள்

25 ஆண்டுகள் நிறைவையொட்டி மன்னார் கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் வெள்ளிவிழா நிகழ்வுகள் இன்று காலை எழுத்தூர் அம்பாள் வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மன்னார் கிழக்கு பனை தென்னை வள அபிவிருத்தி சங்க ஏற்றபாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்விற்கு சங்கத்தின் தலைவர் திரு.மீ.அருளப்பு தலைமை தாங்கினார்.

குறித்த நிகழ்விற்கு வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவுச் சங்க உதவி ஆணையாளர் திரு.மங்களதாஸ், அருட்;பணி.செபமாலை, திரு.சி.தவராஜா, திரு.அமலநாத் சங்க பொது முகாமையாளர்,அம்பாள் ஆலய குரு சிவசிறி வீரசிங்க சர்மா ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக சங்க நிதியில் அமைக்கப்பட்ட வீடு ஒன்று சங்க உறுப்பினர் ஒருவருக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் வைபவரீதியாக வீட்டினை திறந்து வைத்ததோடு பயனாளிக்கு வீட்டினை கையளித்தார்.
அதன்பின் நடைபெற்ற நிகழ்வுகளில் முன்னால் தலைவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.













மன்னார் கிழக்கு, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவு சங்கத்தின் 25வது வெள்ளி விழா -படங்கள் Reviewed by Author on November 30, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.