இலங்கை நீலக்கால் நண்டு கடற்றொழில் முன்னேற்றத்திற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு ஆதரவாக வட பகுதி மீனவர்களின் தலைவர்களால் அனுமதிக்கப்பட்ட முன்மொழிவுகள்.
இலங்கையின் வடமேற்கு நீலக்கால் நண்டு கடற்றொழிலினை முன்னேற்றுவதற்காக இலங்கை கடலுணவு ஏற்றுமதியாளர் ஒன்றியத்தினால் முன்மொழியப்பட்ட ஆலோசனைகளை கலந்துரையாடுவதற்கு யாழ்ப்பாணம்,கிளிநொச்சி ,மன்னார்,புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏழு (7) கடற்றொழிலாளர் சம்மேளனத்தினதும் மீனவ கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தினதும் தலைவர்கள் யாவரும் வவுனியாவில் வார இறுதியில் ஒன்று சேர்ந்தனர்.
நீலக்க கால் நண்டு கடற்றொழிலின் ஆகக் குறைந்த பருமனைப் பிடிப்பது
தொடர்பாகவும் ஆகக் குறைந்த வலைக்கண்ணின் அளவு பாவிப்பது
தொடர்பாகவும் மீனவ தலைவர்கள் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.இலங்கையின்
;வடபகுதி மீனவர்களின் தலைவர்களும்,ஏனைய முன்னிலை வகிக்கும்
அங்கத்தவர்களும் பெண் நண்டுகளை முட்டையுடன் பிடிப்பதனுடைய
தாக்கத்தினைக் குறைப்பதற்காக நண்டுக் குஞ்சு பொரிக்கும் முறையினையும்
நண்டுக் கூடுகளை அறிமுகம் செய்தல் என்பதுடன் நண்டு இனப்பெருக்கத்தின்
முக்கிய காலப்பகுதியில நண்டு பிடித்தலைத் தவிர்ப்பது
தொடர்பாகவும் அதற்கான வேலைத்திட்டத்தினை முன்னெடுத்தல் தொடர்பான
கருத்தொற்றுமைக்கும் வந்தனர்.விசேடமாக நீலக்கால் நண்டு கடற்றொழில்
தொடர்பாக ஒழுங்கு விதிகளைத் தயாரிப்பதற்கு இலங்கை கடலுணவு
ஏற்றுமதியாளர் ஒன்றியம் முன்வைத்த ஆலோசனைகளை வட பகுதி
மீனவசமூகப்பிரதிநிதிகள் வரவேற்றனர்.
தென்னிந்திய றோளர்களின் சட்டரீதியற்ற மீன்பிடி தொடர்பான முக்கிய பிரச்சினை தொடர்பில் இம் மீனவ தலைவர்கள் ஏகமனதாக இவை இலங்கையின் எல்லைப் பகுதிக்குள்; சட்ட ரீதியற்ற முறையில் மீன் பிடிப்பது உடனடியாக முடிபிற்குக் கொண்டு வரப்பட வேண்டும என்பதை வலியுறுத்தினர்.இதே வேளை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சானது தென்னிந்திய றோளர் பாவிக்கும் மீனவர்களை கைது செய்வதுடன் றோளர்களையும்,அவர்களது மீன்பிடி உபகரணங்களையும் பறிமுதல் செய்வதுடன் மீனவர்களை விடுதலை செய்யும் நிலை சரியெனக் கருதுகின்றனர்.
நீலக்கால் நண்டு கடற்றொழில் முன்னேற்றத்திற்கும் தென்னிந்திய றோளர்களின் சட்ட ரீதியற்ற செயற்பாடுகளுக்கும் எதிராக இலங்கை நீலக்கால் நண்டு ஏற்றுமதியாளர் ஒன்றியத்துடனும் கடற்றொழில் நீரயல் வளத்துறை திணைக்களத்துடனும் இணைந்து வேலைத்திட்டங்கை முன்னெடுப்பதற்கு இந்த இரண்டு நாட்கள் கலந்துரையாடலின் மூலம் தங்களது முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக உறுதி கொண்டுள்ளனர்.
இலங்கை நீலக்கால் நண்டு கடற்றொழில் முன்னேற்றத்திற்கும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்களுக்கு ஆதரவாக வட பகுதி மீனவர்களின் தலைவர்களால் அனுமதிக்கப்பட்ட முன்மொழிவுகள்.
Reviewed by Author
on
November 30, 2013
Rating:

No comments:
Post a Comment