அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி.யால் பரபரப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தென்னிந்திய நடிகை ஒருவர் மிக நெருக்கமாக இருக்கும் இருவட்டு (சீ.டி) மற்றும் புகைப்படங்கள் சில சென்னையில் முக்கிய பிரமுகர்களிடம் சிலரிடம் சிக்கியுள்ளதாக உலா வரும் தகவலால் திரையுலகமே பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

குறித்த நடிகை, இலங்கையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரிடமும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும் அவையும் அந்த சீ.டி மற்றும் புகைப்படங்களில் அடங்குவதாகவும் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

இது தொடர்பில்  மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'தமிழில் நம்பர் வன் நடிகையாக இருந்த அவர், திடீரென மும்பையில் செட்டிலாகி, இந்தி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். இந்நிலையில், இந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்புக்காக அவர் இலங்கைக்கு சென்றுள்ளார். 

தமிழகத்தில் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் தமிழ் திரைப்படத்துறை இதற்கு எதிர்ப்பு தெரிவித்த போதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கை வந்த அந்த நடிகை, 'இங்கே தமிழர்கள் சுகமாக வசிப்பதாகவும், விஜய், சூர்யா போன்ற ஹீரோக்களைப் பார்க்க ஆர்வமாக உள்ளதாகவும்' பிரசாரம் செய்தார்.

இதேவேளை, கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டலொன்றில் அந்த நடிகை தங்கியிருந்தபோது அவரைச் சந்திக்க பல தொழிலதிபர்கள் வந்திருந்ததாகவும், அப்படி வந்தவர்களில் ஒருவர் உல்லாசமாக இருக்கும் காட்சியை ரகசியமாக படம் பிடித்து சீ.டி.யாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சீ.டி.தான் இப்போது சென்னையின் வி.வி.ஐ.பி.கள் சிலரிடம் உள்ளதாம்.

இதேபோல், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும் அவர்கள் கைவசம் சிக்கியுள்ளனவாம். இதுகுறித்து விசாரிக்க அந்த நடிகையை தொடர்பு கொண்டபோது, 'அந்த எண் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதா' தெரிவிக்கப்படுகிறது. நடிகைக்கு நெருக்கமானவர்களோ, அவர் இப்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், இந்த தகவல்களில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். 

இலங்கை எம்.பி.யுடன் தென்னிந்திய நடிகை நெருக்கம்; சீ.டி.யால் பரபரப்பு Reviewed by Author on November 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.