வியாபாரம் செய்ய அதற்குரிய விசாவுடன் வாருங்கள்! இந்தியர்களுக்கு அறிவுரை
இலங்கைக்கு எந்த நோக்கத்துக்காக விசா எடுத்து வந்தீர்களோ அந்த நோக்கத்துடன் செயற்படுங்கள்´ என உல்லாசப் பயண விசாவில் இலங்கைக்கு வந்து மன்னாரில் சட்டவிரோதமாக துணி வியாபாரத்தில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகளுக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் அறிவுரை கூறியுள்ளார்.
பண்டிகைக் காலங்களை முன்னிட்டு, இலங்கை வந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் நேற்று (19) மன்னார் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இருவேறு வழக்குகளில் இரண்டு இந்தியப் பிரஜைகளுக்கு எதிராகவும், இலங்கையர்கள் இருவருக்கு எதிராகவும் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதில் இந்தியர் இருவர் இலங்கைக்கு உல்லாசப் பயண விசாவில் வந்து இந்திய ஆடை அணிகலங்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகவும், ஏனைய இரு இலங்கையர்களும் இவர்களுக்கு உறுதுணையாக செயற்பட்டதாகவும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதன்போது, "எந்த அடிப்படையிலான விசாவில் இலங்கைக்கு வருகின்றீர்களோ அதற்கமைய செயற்பட்டால் இங்கு இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாது.
ஆகவே வியாபார நோக்கோடு இங்கு வர விரும்பினால் அதற்கான பயணச்சீட்டோடு வந்து செயற்படுங்கள் என நீதிபதி அறிவுரை வழங்கினார்.
மேலும் அவர்கள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொண்டதால் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டதுடன், ஒவ்வொருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

Reviewed by Author
on
December 20, 2013
Rating:
Reviewed by Author
on
December 20, 2013
Rating:
.jpg)

No comments:
Post a Comment