அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவும்:செல்வம் எம்.பி

மன்னார் பெரியகடை கிராமத்தில் மக்கள் குடியிருப்பிற்கு அருகாமையில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை  அகற்ற உரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

பெரிய கடை கிராம மக்களின் குடியிருப்புகளுக்கு அருகாமையில் இரகசியமான முறையில் மது விற்பனை நிலையம் ஒன்று  அமைக்கப்பட்டு வருகின்றது.

இந்த விடையம் தற்போது தான் அக்கிராம மக்களுக்கு தெரிய வந்துள்ளது. ஏற்கனவே மன்னார் சௌத்பார் பகுதியில் அமைந்திருந்த 2 மது விற்பனை நிலையங்களும் அப்பகுதி மக்களின் பாரிய எதிர்ப்பால் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரகசியமான முறையில் பெரிய கடைப்பகுதியில் மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு வந்துள்ளது.

அப்பகுதியில் அதிகமான பாடசாலை மாணவர்கள்,யுவதிகள் உள்ள நிலையில் போலியான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு மக்களின் ஆதரவுடன் குறித்த மது விற்பனை நிலையம் அமைப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்டிருக்கின்றது.

இதனால் அப்பகுதியில் பல்வேறு கலாச்சார சீர் கேடுகள் இடம் பெறும் என அப்பகுதி மக்கள் குறிப்பாக பெண்கள் அஞ்சுகின்றனர்.

எனவே குறித்த இடத்தில் மது விற்பனை நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கிய அதிகாரிகள் உடனடியாக அதனை நிறுத்த துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.என தெரிவித்தார்.





மன்னார் பெரியகடை பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மது விற்பனை நிலையத்தை உடன் அகற்ற நடவடிக்கை எடுக்கவும்:செல்வம் எம்.பி Reviewed by Author on December 20, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.