அண்மைய செய்திகள்

recent
-

வடக்கில் 60,000 வீடுகள்; 300 மில்லியன் அமெ.டொலர் தேவை

யுத்ததால் பாதிக்கப்பட்ட வட மாகாணத்தில் 60,000 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு 300 மில்லியன் அமெரிக்க டொலரிலும் கூடுதலான நிதி தேவைப்படுவதாக உதவி உத்தியோகஸ்தர்கள் கூறியுள்ளனர். 

வீடு நிர்மாணிப்பதற்கென புதிய நீதியென எதுவும் வருதில்லை என இலங்கை செஞ்சிலுவை சங்க தலைவர் ஜகத் அபேசிங்க கூறினார்.

யுத்தம் முடிந்த கையோடு நாம் வீடமைப்புக்களுக்களுக்கு நிதியை மும்முரமாக கேட்டுப் பெற்றிருக்க வேண்டும். காலம் கடந்துவிட்டதாலும் இதைவிட முக்கிய பிரச்சினைகள் உலகின் பல பகுதிகளிலும் ஏற்பட்டமையினாலும் நிதிவளம் அற்றுப்போக காரணமாகின என்று அபேசிங்க கூறினார்.

வட மாகாணத்தில் 138,651 குடும்பங்களில் 32 சதவீதமானோர் மட்டும் தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்தனர்.  6 சதவீனமானோர் உறவினர் நண்பர்களுடன் வாழ்ந்தனர் என 2013இல் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டது.

யுத்தம் முடிந்த பின்னர் 146,000 வீடுகள் தேவைப்பட்டிருந்தன. 41,000 வீடுகள் மாத்திரம்  மீளக்குடியமர்ந்;தோருக்கு மட்டும் வழங்கப்பட்டன. 10,500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன என ஐ. நா ஹரிட்டார் கூறினார்.

83,000 வீடுகளுக்கு அரசாங்கமும் நன்கொடையாளர்களும் நிதி அளித்துள்ளனர். ஆயினும் இன்னும் 63,000 வீடுகளுக்கு நிதி தேவையென அதிகாரிகள் கூறுகின்றார்கள்.
வடக்கில் 60,000 வீடுகள்; 300 மில்லியன் அமெ.டொலர் தேவை Reviewed by NEWMANNAR on February 28, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.