அண்மைய செய்திகள்

recent
-

வடக்கு மாகாண முதலமைச்சரின் சேவையில் எனக்கு பூரண நம்பிக்கையுண்டு :அமைச்சர் ரிஷாட் பதியுதீன்

வடமாகாண மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பூரண நம்பிக்கைக் கொண்டு பாரிய பொறுப்பை அவர்களின் தலையில் சுமத்தியுள்ளனர். அத்துடன் சிறந்த மாகாண சபை முதல்வரையும் தெரிவு செய்துள்ளனர். அவர் நன்கு செயல்படுவார் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அத்துடன் சமுர்த்தி உத்தியோகத்தர்களாக கடமை புரியும் ஒவ்வொருவரும் இனம் மொழி மதம் என்ற சிந்தனைக்கு அப்பால் இருந்து சேவையாற்ற வேண்டுவதுடன் உங்கள் பகுதியில் உருவாகும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் உங்கள் பிரச்சனைகளாக நினைத்து செயல்படவேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சமுர்த்தி உத்தியோகத்தர்கள் 274 பேருக்கு அவர்களுக்கான உத்தியோக அடையாள அட்டைகளும் அலுவலக பைகளும் வழங்கும் வைபவம் செவ்வாய் கிழமை (11) மன்னார் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இவ் வைபவத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் குனைஷ் பாறூக் மற்றும் திட்டமிடல் சமுர்த்தி அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்ந்து இங்கு உரையாற்றுகையில்
நீண்ட நாட்களாக இந்த சந்திப்பு இடம்பெறவேண்டும் என்று நினைத்திருந்தாலும் கூட எங்கள் வேலை பழு காரணமாக இந்த சந்திப்பு இடம்பெறாமல் காலம்தாழ்த்தப்பட்டது. கடந்த மாகாணசபை தேர்தலுக்குப்பிறகு இன்றுதான் நாம் ஒன்றாக சந்திக்கின்றோம்.
. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ; வன்னி மக்கள் மீது கொண்ட அன்பு காரணமாகத்தான் மகிந்த சிந்தனை என்ற பாரிய வேலை திட்டத்தை உங்களுடைய கரத்திலே உங்களுடைய தலையிலே உங்களுடைய பொறுப்பிலே தந்திருக்கின்றார்
.வன்னி மாவட்டத்திலே அவருடைய பிரதிநிதியாக எங்களின் நம்பிக்கையின் பேரில் எங்களினூடாக இவ் பொறுப்புக்களை உங்களிடம் ஒப்படைத்துள்ளார் எனவே இதை நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் அதாவது ஒவ்வொரு கிராமங்களிலும் அல்லது பிரதேச பிரிவுகளாக இருக்கலாம் மாவட்ட செயலகமாக இருக்கலாம் அன்றேல் எந்த இடமாக இருக்கலாம் அங்கு உங்கள் கடமைகளை நேர்மையாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் செய்து முடிக்கவேண்டும் என்று உங்களை அன்பாக கேட்டுக்கொள்கிறேன்.
சமுர்த்தி திட்டத்திலே உதவிபெறுகின்ற குடும்பங்கள் மன்னார் மாவட்டத்திலே 13166 குடும்பங்கள் 42000 குடும்பத்திலே 13166 குடும்பங்கள் சமுர்த்தி உதவியை பெறுகிறார்கள். இந்த குடும்பத்துடன் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்துகின்ற நல்ல ஆலோசனையை சொல்லுகின்ற,அவ் குடும்பங்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஆலோசனை வழங்குகின்ற அந்த குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்தி விடுகின்ற பாரிய பொறுப்பு உங்களுடைய கைகளிலே இருக்கின்றது.
எனவே இந்த பொறுப்பை சரியான முறையில் செய்து முடிக்கும் உத்தியோகஸ்தர்களாக நீங்கள் இருக்கவேண்டும். அவர்கள் உங்களில் நம்பிக்கை கொள்ளும் உத்தியோகத்தர்களாக உங்களை நீங்கள் ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அந்த மக்கள் தமிழர்களாக இருக்கலாம் அல்லது முஸ்ஸிம்களாக இருக்கலாம் அல்லது அவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் அங்கே எந்தவித பாகுபாடுகளும் இன்றி ஊரில் உள்ள மக்களோடு நீங்கள் அன்னியயோன்னியமாக இருக்க வேண்டும்.
எனக்கு தெரிந்த வகையில் சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மக்களோடு மிகவும் அன்னியொன்னியமாக இருந்து செய்படுவதை நான் நன்கு அறிவேன். நீங்கள் கடமை புரியும் பகுதியில் எழும் பிரச்சனைகள் எல்லாம் உங்கள் பிரச்சனைகளாக நினைத்து அவைகளை தீர்த்து வைக்கும் நல் மனிதநேயம் கொண்டவர்களாக திகழ வேண்டும்.
அந்த ஊரில் என்ன குறையோ அதை சிரமதான மூலம் செய்து முடிக்க முடியுமானால் அவற்றை கையாள வேண்டும். அதன் மூலம் நிறைவேற்ற முடியவில்லையென்றால் இங்கே பாராளமன்ற உறுப்பினர் இருக்கிராரகள்;, பிரதேச சபை உறுப்பினர்கள் இருக்கின்றார்கள், இன்னும் அரச பிரதிநிதிகள் இருக்கின்றார்கள் அவர்களிடம் அதை சொல்லி அப்பிரச்சினையை தீர்த்து வையுங்கள். இல்லாவிடில் என்னிடம் வந்து சொல்லுங்கள் உங்களுக்கு இந்த மாவட்டத்திற்கு ஒதுக்கும் பணத்தில் உங்களின் பிரச்சனை உண்மையானதும் மக்களுக்கு அத்தியாவசியதுமானது எனக் கண்டால் இயன்றளவு ஓதுக்கீடு செய்து பிரச்சினையை முடித்து கொடுப்போம்.
அத்துடன் அமைச்சர் பசீல் ராஷபக்ஷவிடம் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய அமைச்சர்களுடன் பேசி பிரச்சனைகளை தீர்த்து வைக்க முடியும். இவற்றையெல்லாம் சரிவரச் செய்ய வேண்டுமானால் உங்கள் வேலைத்திட்டங்கள் சரியான முறையில் அமைய வேண்டும்.
சமுர்த்தி உத்தியோகத்தர்களாகிய நீங்கள் உங்களைப் பற்றி மட்டும் சிந்திக்காது ஒவ்வொரு கிராமத்தினதும் எமது மாவட்டத்தினதும் வளர்ச்சியை கவணத்தில் கொள்ள வேண்டும். அத்துடன் இதை முன்னெடுத்துச் செல்ல அரசின் ஆதரவுத் தேவை. எங்கள் கட்ச்p அரசின் ஆதரவை கொண்டுள்ளமையினால்தான் மன்னார் மட்டுமல்ல முல்லைத்தீவு கிளிநொச்சி மாவட்டங்களையும் நாம் அபிவிருத்தி பாதைக்கு முன்னெடுத்துச் செல்ல முடிந்தது.
இன்று வட மாகாணத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிக செல்வாக்கை கொண்டு மாகாண சபையை அமைத்துள்ளனர். அவர்களுக்கு சில அதிகாரங்கள் இருக்கின்றன. அவர்களுக்கு பாரிய பொறுப்புக்களை இவ் மக்கள் அவர்களின் தலையிலே சுமத்தி இருக்கின்றார்கள்.
இந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு பணியாற்றவேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருக்கின்றது. அவர்கள் ஒரு நல்ல முதலமைச்சரை தெரிவு செய்திருக்கின்றார்கள் அவர் இந்த மக்களுக்கு சிறந்த சேவையை செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. . இதை செய்யவேண்டிய பொறுப்பும் அவர்களுக்கு இருக்கின்றது.
இதேபோன்று மத்திய அரசு இருக்கின்றது மத்திய அரசின் பிரதி நிதிகளாக நாங்கள் இங்கு இருக்கின்றோம்; எங்களுக்கும் பொறுப்புக்கள் இருக்கின்றது. அதை சரியாக செய்யவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. எனவேதான் நாங்கள் அடிக்கடி உங்களை சந்திக்காவிட்டாலும் எதிர்காலத்தில் உங்களை நாங்கள் சந்திப்போம். சந்தித்து இந்த வேலைத்திட்டங்களை, அபிவிருத்தி நடவடிக்கைகளை, ஒதுக்கீடுகளின் மீளாய்வை நாங்கள் உங்களினூடாக பெறுவோம் அதை ஜநாதிபதிக்கு கொண்டு செல்லுவோம், பசில் ராஜபக்சவிற்கு கொண்டு செல்லுவோம் ஏனைய அமைச்சிக்கு கொண்ட செல்லுவோம் இதனூடாக இந்த மாவட்டத்திலே ஒரு வழர்ச்சியை, ஒரு எழுச்சியை எதிர்காலத்தில் கொண்டு வர நாங்கள் முயற்சிப்போம். என்றார்
வடக்கு மாகாண முதலமைச்சரின் சேவையில் எனக்கு பூரண நம்பிக்கையுண்டு :அமைச்சர் ரிஷாட் பதியுதீன் Reviewed by Author on February 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.