மலேசிய விமானத்தின் விமானியின் வீட்டில் இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளின் ஓடுதளங்களின் மென்பொருள்
காணாமல்போன மலேசிய விமானத்தின் விமானி ஒருவருடைய வீட்டை சோதனையிட்டபோது கண்டுபிடிக்கப்பட்ட விமான பறப்பு ஒப்பாக்கியில் (flight simulator) இலங்கை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களின் ஒடுதளங்கள் உள்ளமை தெரியவந்துள்ளது.
உலகின் முன்னணி விமான நிலையங்களின் விமான ஓடுதள மாதிரிகளை உள்ளடக்கிய மென்பொருள் குறித்த விமானியின் விமான பறப்பு ஒப்பாக்கியில் (flight simulator) உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை, மாலைத்தீவு ஆகிய நாடுகளின் விமான ஒடுபாதைகளும் இந்திய விமான நிலையங்கள் மூன்றின் ஓடுபாதைகளும் இவற்றுள் அடங்குகின்றன.
அமெரிக்க இராணுவத் தளமான டீகோ கார்சியாவின் விமான ஓடுதளமும் குறித்த மென்பொருளில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும் என மலேசிய அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி அந்நாட்டு தினசரி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தலைமை விமானியான சஹாரி அஹமட் ஷாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த மென்பெருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பில் அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மலேசிய விமானத்தின் விமானியின் வீட்டில் இலங்கை உள்ளிட்ட 5 நாடுகளின் ஓடுதளங்களின் மென்பொருள்
Reviewed by NEWMANNAR
on
March 18, 2014
Rating:

No comments:
Post a Comment