தெற்கு அதிவேக வீதியில் விபத்து; குழந்தை பலி, 9 பேர் காயம்
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 5.30 அளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
35ஆவது மைல் கல் பகுதியில் லொறியொன்றும், வேன் ஒன்றும் மோதுண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இந்த விபத்தில் காயமடைந்த குழந்தை கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளது.
காலியை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த வேன், முன்னால் பயணித்த லொறியுடன் மோதுண்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.
தெற்கு அதிவேக வீதியில் விபத்து; குழந்தை பலி, 9 பேர் காயம்
Reviewed by NEWMANNAR
on
March 18, 2014
Rating:

No comments:
Post a Comment