குடும்பத்தில் அனைவருக்கும் காய்ச்சல்: அதிர்ச்சியில் தற்கொலை செய்த ஆசிரியை
வீட்டில் அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்ட காரணத்தினால் பட்டதாரி பெண் ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தாய், தந்தை, மகள் மற்றும் கணவர் ஆகியோர் வீட்டில் நோய் வாய்ப்பட்டிருப்பதனை தாங்கிகொள்ள முடியாது இவ்வாறு குறித்த பட்டதாரி ஆசிரியை உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
குளியாப்பிட்டிய தலஹிட்டிமுல்ல பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் அனைவரும் உறங்கியதன் பின்னர் குறித்த ஆசிரியை பெற்றோல் ஊற்றி தனக்கு தானே தீ மூட்டிக்கொண்டுள்ளார்.
பிரியதர்சனி அத்தநாயக்க என்ற 35 வயதான ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குளியாப்பிட்டிய பிரதேச பிரபல பாடசாலையொன்றில் இவர் ஆசிரியையாக கடமையாற்றி வந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குடும்பத்தில் அனைவருக்கும் காய்ச்சல்: அதிர்ச்சியில் தற்கொலை செய்த ஆசிரியை
Reviewed by NEWMANNAR
on
March 12, 2014
Rating:

No comments:
Post a Comment