அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரைச் சேர்ந்த இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர் எம்.ஏ.ஹபூர் காலமானார்

இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர் எம்.ஏ.ஹபூர் நேற்று இயற்கை எய்தினார்.

சிங்கள கலைஞர்கள் உள்ளடங்களாக பெரும்பாலானோரின் நன்மதிப்பை பெற்ற தமிழ் மொழிமூலமான இயக்குனராக பலராலும் அறியப்பட்ட எம்.ஏ.ஹபூர் மன்னார் மண்ணை சொந்த இடமாக கொண்டவர்.

திரைப்படத்துறையில் தமது காலத்தை முழுமையாக செலவிட்ட அவர் தமது 75வது வயதில் திகாரியில் இறைபதம் அடைந்திருக்கின்றார்.

காலம் சென்ற திரைப்பட இயக்குனர் எம்.ஏ.ஹபூர் நாட்டில் பல விருதுகளை பெற்றிருப்பதோடு இலங்கையை ஆட்சி செய்த நான்கு ஜனாதிபதிகளால் சிறப்பு விருதுகள் பெற்றிருப்பது சிறப்பம்சமாகும்.

இவர் இலக்கியவாதியான கலைவாதி கலீல் மற்றும் சிரேஸ்ட ஊடகவியலாளர் மக்கள் காதர் என்பவர்களின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மன்னாரைச் சேர்ந்த இலங்கையின் முன்னணி திரைப்பட இயக்குனர் எம்.ஏ.ஹபூர் காலமானார் Reviewed by NEWMANNAR on March 18, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.