வவுனியா, மன்னார் வீதியில் ரயிலின் முன்னே பாய்ந்த பஸ்! பயணிகள் மயிரிழையில் தப்பினர்
வவுனியா, மன்னார் வீதியில் காமினி மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள புகையிரத கடவையினை மோதித் தள்ளியபடி ரயிலின் முன்னே பஸ் ஒன்று பாய்ந்தமையால் அதில் பயணம் செய்த 28 பேர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
ஞாயிற்றுக் கிழமை(09) பாவற்குத்தில் இருந்து வவுனியா நகருக்கு 12.30 மணியளவில் வந்த தனியார் பஸ் ஆனது மன்னார் வீதி புகையிரதக் கடவையில் பூட்டப்பட்ட பாதுகாப்பு கடவை மற்றும் ஒலிச் சமிக்ஞை என்பவற்றை மீறி பாதுகாப்பு கடவையை இடித் தள்ளுயபடி புகையிரப் பாதைக்குள் நுழைந்துள்ளது.
இருப்பினும் புகையிரத கடவையில் கடமையில் இருந்த அதிகாரிகளும் அவ் வீதியால் பயணித்தவர்களும் உடனடியாக மற்றை பக்க கடவையை திறந்து பஸ்ஸினை வெளியேற்றியமையாலும் ரயிலுக்கு சமிக்ஞை கொடுத்தமையாலும் பாரிய அனர்த்தம் தடுக்கப்பட்டது. பஸ் நிறுத்தியதும் அச்சமடைந்த பயணிகள் பஸ்ஸில் இருந்து குதித்து நாலாபுறமும் ஓடித் தப்பினர்.
இச் சம்பவத்தின் போது குறித்த பஸ்ஸில் 28 பயணிகள் பயணம் செய்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக வவுனியா போக்குவரத்துப் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதேவேளை, குறித்த பாதுகாப்பு கடவையை மீறி சாரதிகள் பலர் தொடர்ச்சியாக தமது வாகனத்தை செலுத்துவதாகவும் குறித்த பாதுகாப்பு கடவை உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

Reviewed by Admin
on
March 10, 2014
Rating:

No comments:
Post a Comment