இருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி
திருகோணமலையில் இருவேறு பகுதிகளில் காட்டு யானைத் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர்.
மூதூர் 15 ஆம் கட்டை பகுதியில் வயலில் காவல் காத்த ஒருவர் யானைத் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மணல்சேனையைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
இதேவேளை, மொறவெவ பொலிஸ் பிரிவின் எத்தாபெந்திவெவ பகுதியிலும் காட்டு யனைத் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
காட்டுப் பகுதியில் உள்ள சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கொண்டுச் செல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இருவேறு பகுதிகளில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:

No comments:
Post a Comment