இருளில் மூழ்கும் நிலையில் காஸா; இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காஸா பகுதியில் இருந்த ஒரே ஒரு மின் நிலையமும் சேதமடைந்துள்ளது.
இதனால் காஸா முற்றிலும் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தாக்குதல் குறித்து இஸ்ரேல் தரப்பில் எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இருப்பினும், இது பற்றி குறித்த மின் நிலையத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவிக்கையில், ”மின் நிலையத்திற்குத் தேவையான எரிபொருள் வைக்கப்பட்டிருந்த டாங்கர்களில் ஒன்றை முற்றிலுமாக இஸ்ரேல் படையினர் அழித்துவிட்டனர்” என்றார்.
இந்தத் தாக்குதலுக்கு முன்னர் நாளொன்றுக்கு 3 மணி நேரம் மட்டுமே காஸாவில் மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த நிலைமை மேலும் மோசமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா மீதான தாக்குதல் தொடரும், ஐ.நா, அமெரிக்காவின் நெருக்கடி ஏற்புடையதல்ல என தொலைக்காட்சியில் அறிவித்த சில மணி நேரத்தில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காஸா தாக்குதலில் பலியான பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 1,110 ஆகவும், இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 53-ஆகவும் உள்ளதாக காஸா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருளில் மூழ்கும் நிலையில் காஸா; இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 29, 2014
Rating:


No comments:
Post a Comment