சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு
சீனி இறக்குமதிக்கு விதிக்கப்படும் வர்த்தக பொருட்களுக்கான விசேட தீர்வை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, 25 ரூபாவாக காணப்பட்ட தீர்வை, 28 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டது.
உள்நாட்டு சீனி உற்பத்தியை கருத்திற்கொண்டு, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதன்மூலம், வர்த்தக சந்தையில் சீனியின் விலை அதிகரிக்கும் சாத்தியம் இல்லை என அவர் கூறினார்.
சீனிக்கான இறக்குமதி தீர்வை அதிகரிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment